ADDED : அக் 06, 2025 11:01 PM

பே மென்ட்ஸ் சேவை வழங்கி வரும் 'ட்விட்' நிறுவனம், ரிவார்டு புள்ளிகளை கொண்டு யு.பி.ஐ., பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில், ட்விட் யு.பி.ஐ., என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
பயனர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் வாங்கும் பொருட்களுக்கு, நாடு முழுதும் இந்த ரிவார்டு புள்ளிகளை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
ட்விட் யு.பி.ஐ., செயலியை பயன்படுத்தி, பயனர்கள் தங்களுடைய பல்வேறு வங்கிகள், பிராண்டுகள் மற்றும் லாயல்டி திட்டங்களில் உள்ள ரிவார்டு புள்ளிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த முறையில் நிர்வகிக்க முடியும். இது, இந்த புள்ளிகளை பணம் போலவே எளிதாக பயன்படுத்த வழிவகுக்கிறது.
பயனர்கள் யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தும்போதே, தங்கள் ரிவார்டு புள்ளிகளை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. இது உடனடி சேமிப்புக்கு உதவுகிறது. இந்த செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், பயனர்கள் 'ட்விட் ஸ்டார்ஸ்' என்ற ரிவார்டு புள்ளிகளை பெறுவர்.