
ரயில்வே துறை பங்குகள் ஏற்றம்
ம காராஷ்டிராவில் 89,780 கோடி ரூபாய் மதிப்பிலான 38 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக, நேற்று ரயில்வே துறையை சார்ந்த நிறுவன பங்குகள் 9 சதவீதம் வரை உயர்ந்தன. குறிப்பாக, 'ஜூபிடர் வேகன்ஸ், இர்கான், பி.இ.எம்.எல்., மற்றும் ரயில்டெல்' ஆகிய நிறுவன பங்குகள் கணிசமாக ஏற்றம் கண்டன.
உயர்ந்து சரிந்த 'லென்ஸ்கார்ட்'
தா ய்லாந்தை சேர்ந்த 'மார்கோ ஆப்டிக்கல்' நிறுவனத்தின், 50 சதவீத பங்குகளை வாங்குவதாக 'லென்ஸ்கார்ட்' நிறுவனம் அறிவித்தது. இதன் வாயிலாக, தாய்லாந்தில் புதிய கூட்டு முயற்சியை இந்நிறுவனம் துவக்குகிறது. இதையடுத்து, நேற்றைய வர்த்தகத்தின் இடையே இந்நிறுவனப் பங்குகள் விலை 5 சதவீதம் வரை உயர்ந்தது. இறுதியில் பெரிய மாற்றம் ஏதுமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஐ.பி.ஓ.,வுக்கு தயாராகும் 'ஓயோ'
ஓ யோவின் தாய் நிறுவனமான 'பிரிசம்' புதிய பங்கு வெளியிட பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக இந்நிறுவனம் 6,650 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, இந்நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுவதற்கான முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

