UPDATED : ஜன 31, 2026 01:35 AM
ADDED : ஜன 31, 2026 01:34 AM

ஹிந்துஸ்தான் காப்பர் பங்கு 133 சதவீத வளர்ச்சி
பொதுத்துறையைச் சேர்ந்த 'ஹிந்துஸ்தான் காப்பர்' நிறுவனத்தின் பங்குகள், கடந்த இரண்டு மாதங்களில், கிட்டத்தட்ட 133 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டுள்ளன. இதனால், முதலீட்டாளர்கள் 42,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளனர்.
தற்போது, ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 73,500 கோடி ரூபாயாக உள்ளது. உலகளாவிய காப்பர் தேவை அதிகரிப்பு, புதிய சுரங்கத்தை கையகப்படுத்தியது ஆகிய காரணங்களால், ஹிந்துஸ்தான் காப்பர் பங்குகள் உயர்வு கண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே மியூச்சுவல் பண்டுகள்: 8 சதவீதம் சரிவு
![]() |
ர யில்வே துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகள், கடந்த பட்ஜெட் தாக்கலில் இருந்து கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிவை கண்டுள்ளன. கடந்த பட்ஜெட்டுக்கு பின், முதலீட்டாளர்கள் சில உட்கட்டமைப்பு பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தனர்.
மேலும், நுகர்பொருட்கள், தொழில்நுட்பத்தை நோக்கி முதலீடுகள் சென்றதால், ரயில்வே பங்குகள் கூடுதல் அழுத்தத்தை எதிர்கொண்டன. கடந்தாண்டு பிப்., 4ம் தேதி துவங்கப்பட்ட 'குரோ நிப்டி இந்தியா ரயில்வேஸ் பி.எஸ்.யு., - இ.டி.எப்., 7.74 சதவீதமும், குரோ நிப்டி இந்தியா ரயில்வேஸ் பி.எஸ்.யு., இண்டெக்ஸ் பண்டு' 7.59 சதவீதமும் சரிந்துள்ளன.


