தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

 சந்தை துளிகள்


ADDED : ஜூன் 06, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' தொடர் சரிவு


'ரா ஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' பங்கு விலை நேற்று, 5 சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய தினமும் பங்கு விலை, 5 சதவீதம் சரிந்ததால், இரண்டு நாட்களில் மொத்தம் கிட்டத்தட்ட, 10 சதவீதம் குறைந்துள்ளது. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளில், 15.15 லட் சம் கோடி ரூபாய்க்கு குளறுபடிகள் இருப்பதாக செபி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், நிறுவனத்தின் புரமோட்டர் ராஜேஷ் மேத்தா பங்கு சந்தையை அணுக தடை விதித்து, செபி இடைக்கால உத்தரவு வெளியிட்டுள்ளது.

'ஏ.சி.எம்.இ., சோலார்' ரூ.2, 800 கோடி 'கியூ.ஐ.பி.,' வெளியீடு

'ஏ .சி.எம்.இ., சோலார் ஹோல்டிங்ஸ்' நிறுவனத்தின், 'கியூ.ஐ.பி.,' வெளியீடு நேற்று முடிவடைந்தது. இதில், 2,800 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கடன்களை குறைக்கவும், இருப்புநிலையை மேம்படுத்தவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கியூ.ஐ.பி., வெளியீட்டில், 'எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு, ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு, நிப்பான் மியூச்சுவல் பண்டு, ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு, கோட்டக் மியூச்சுவல் பண்டு, எஸ்.பி.ஐ., லைப், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ்' உள்ளிட்ட உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். மேலும், 'பிளாக்ராக், அமுண்டி, கோல்டுமேன் சாக்ஸ், அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, பிக்டெட்' உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பங்கேற்றனர்.

கைமாறிய ரூ.100 கோடி 'கோ டிஜிட்' பங்குகள்

'கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனத்தின், 33.30 லட்சம் பங்குகளை, 'பீக் எக்ஸ்.வி., பார்ட்னர்ஸ்' நிறுவனம் விற்றுள்ளது. இந்த பங்குகளை, 'ஜே.பி., மார்கன்' நிறுவனமும், 'ஆதித்ய பிர்லா சன் லைப் மியூச்சுவல் பண்டு' நிறுவனமும் வாங்கியுள்ளன. ஒரு பங்கு, 300 ரூபாய் என்ற விலைக்கு, மொத்தம், 100 கோடி ரூபாய்க்கு இந்த வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து, நேற்று வர்த்தகத்தில் கோ டிஜிட் பங்கு விலை, 10 சதவீதம் வரை உயர்ந்து, இறுதியில், 1.25 சதவீத ஏற்றத்தில் முடிவடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us