தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டாலர் வரவை அதிகரிக்க 'போரக்ஸ் ஸ்வாப்' வசதி ஆர்.பி.ஐ., அறிமுகம்

 டாலர் வரவை அதிகரிக்க 'போரக்ஸ் ஸ்வாப்' வசதி ஆர்.பி.ஐ., அறிமுகம்

 டாலர் வரவை அதிகரிக்க 'போரக்ஸ் ஸ்வாப்' வசதி ஆர்.பி.ஐ., அறிமுகம்


ADDED : ஜூன் 06, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உ லகளாவிய நிதி சந்தைகளில் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்களின் நகர்வாலும், முக்கிய மத்திய வங்கிகளின் இறுக்கமான பணக்கொள்கை முடிவுகளாலும் கரன்சி சந்தையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

இத்தகைய சூழலில், வெளிநாட்டு நிதி திரட்டலை ஊக்குவிக்கவும், டாலர் வரவை அதிகரிக்கவும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு சலுகை விலையிலான 'போரக்ஸ் ஸ்வாப்' திட்டத்தை ஆர்.பி.ஐ., அறிவித்துள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொள்ளும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான வெளிநாட்டு கடன் வாங்குதலை ஊக்குவிக்கும் வகையில், இந்த வசதியை 2026 செப்டம்பர் 30ம் தேதி வரை ரிசர்வ் வங்கி வழங்க உள்ளது.

இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் தைரியமாக வெளிநாட்டு கடன்களை திரட்டி இந்தியாவிற்குள் டாலர் வரவை அதிகரிக்க வேண்டும் என்பதும், அதன் வாயிலாக, இந்திய ரூபாயின் மதிப்பை நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்துடன் ஆர்.பி.ஐ., செய்துள்ள முக்கிய 3 நடவடிக்கைகள்

1 அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான விதிமுறைகள் தளர்வு

2 வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வங்கிகளில் வரவு வைக்கும் வெளிநாட்டு கரன்சி வைப்பு தொகைக்கான வட்டி விகித உச்சவரம்பு தளர்வு

3 இந்திய நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளில் இருந்து திரட்டக்கூடிய கடன் வரம்பு தற்காலிகமாக உயர்வு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us