தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/துளிகள்

துளிகள்

துளிகள்


UPDATED : அக் 09, 2026 02:20 AM

ADDED : அக் 08, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 02:20 AM ADDED : அக் 08, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.எஸ்.இ.,யில் 1.61 லட்சம்

புதிய முதலீட்டாளர்கள்

க டந்த செப்டம்பர் மாதத்தில் தரகு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1.61 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன. இதனால், தேசிய பங்கு சந்தையில் மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4.61 கோடியாக உயர்ந்துள்ளது என்று என்.எஸ்.இ., தரவுகள் கூறுகின்றன. அதிகபட்சமாக, 'குரோ' நிறுவனம் 1.01 லட்சம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. இதுதவிர, 'ஏஞ்சல் ஒன்' (37,000), 'சாஹி' (28,077) ஆகிய நிறுவனங்களும் முன்னணியில் உள்ளன.

Image 1628204

'பேடிஎம்' பங்கு விலை

10 சதவீதம் வீழ்ச்சி

அ ட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் பட்டியலில் இருந்து 'பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க்' நீக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே, இவ்வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துவிட்டது. தற்போது, பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதால், நேற்றைய வர்த்தகத்தில் 'பேடிஎம்' பங்கு விலை 10 சதவீதம் வரை சரிந்து, வர்த்தக முடிவில் 5.23 சதவீத இறக்கத்துடன் நிலைபெற்றது.



'வேதாந்தா' 5 ரூபாய்

டிவிடெண்டு அறிவிப்பு

'வே தாந்தா' நிறுவனம் நடப்பு 2026 - 27ம் நிதியாண்டுக்கு, முதல் இடைக்கால டிவிடெண்டு தொகையாக 5 ரூபாய் அறிவித்துள்ளது. இதை பெறுவதற்கான ரிக்கார்டு தேதி வரும் அக்டோபர் 14 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வேதாந்தா நிறுவனங்கள் பிரிக்கப்பட்ட பிறகு வழங்கப்படும் முதல் டிவிடெண்டு தொகை ஆகும். எனினும், நேற்று வர்த்தக முடிவில் வேதாந்தா பங்கு 3.18 சதவீத சரிவுடன் நிலைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us