தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/கடன் பத்திரங்களுக்கு செபியின் ‘ரிஸ்க்–ஓ–மீட்டர்’

கடன் பத்திரங்களுக்கு செபியின் ‘ரிஸ்க்–ஓ–மீட்டர்’

கடன் பத்திரங்களுக்கு செபியின் ‘ரிஸ்க்–ஓ–மீட்டர்’


UPDATED : அக் 09, 2026 12:00 AM

ADDED : அக் 08, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 12:00 AM ADDED : அக் 08, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க டன் பத்திரங்களில் உள்ள அபாயத்தை முதலீட்டாளர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், வண்ண குறியீட்டுடன் கூடிய ‘கிரெடிட் ரிஸ்க்–ஓ–மீட்டரை’ செபி கட்டாயமாக்கியுள்ளது.

பொது வெளியீடு அல்லது தனிப்பட்ட ஒதுக்கீடு வாயிலாக வெளியிடப்படும் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்பட உள்ள கடன் பத்திரங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும்.

இதில், கடன் பத்திரங்கள், வணிக ஆவணங்கள் உள்ளிட்டவை அடங்கும். சுற்றறிக்கை வெளியான 45 நாட்களுக்கு பிறகு இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்



6 அபாய நிலைகள்: ஏ.ஏ.ஏ., முதல் டி வரையிலான மதிப்பீடுகள் 6 வண்ண அடிப்படையிலான அபாய நிலைகளாக வகைப்படுத்தப்படும்

குறைந்த மதிப்பீடு: பல மதிப்பீடுகள் இருந்தால், குறைந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ரிஸ்க் மீட்டர் அமைக்கப்படும்

பாதுகாப்பற்ற பத்திரம்: ‘பாதுகாப்பற்றது’ என்ற தகவல் சிவப்பு நிறத்தில் தடிமனான எழுத்தில் இடம்பெறும்

24 மணி நேரத்தில் புதுப்பிப்பு: மதிப்பீடு மாறினால், ஆன்லைன் கடன் பத்திர தளங்கள் 24 மணி நேரத்துக்குள் ரிஸ்க் மீட்டரை மாற்ற வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us