சிறு முதலீட்டாளர்களுக்கு 'சில்வர் 100' பியூச்சர்ஸ் எம்.சி.எக்ஸ்., அறிமுகம்
சிறு முதலீட்டாளர்களுக்கு 'சில்வர் 100' பியூச்சர்ஸ் எம்.சி.எக்ஸ்., அறிமுகம்
ADDED : ஜூன் 02, 2026 07:15 AM

சி று முதலீட்டாளர்கள், நடுத்தர நகை வியாபாரிகள் மற்றும் வெள்ளி நிறுவனங்கள், விலையேற்ற இறக்க நஷ்டங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள ஏதுவாக, எம்.சி.எக்ஸ்., சந்தை 'சில்வர் 100' என்ற புதிய பியூச்சர்ஸ் ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் வாயிலாக, வெறும் 100 கிராம் அளவிலும் வெள்ளியில் முதலீடு செய்ய முடியும் என்பதால், குறைந்த முதலீட்டை கொண்டு சந்தை அபாயங்களுக்கு ஏற்ப சிறு முதலீட்டாளர்கள் தங்களது கமாடிட்டி போர்ட்போலியோவை எளிதாக பல்வகைப்படுத்தலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
முக்கிய விபரங்கள் இதுவரை பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த வெள்ளி சந்தையில், இனி சிறு முதலீட்டாளர்களும், சிறு நகை வியாபாரிகளும் மிக குறைந்த அளவில் தங்களது முதலீட்டை தொடங்கலாம்
ஏற்கனவே 30 கிலோ, 5 கிலோ மற்றும் 1 கிலோ அளவிலான வெள்ளி பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களும், அதே அளவிலான மாதாந்திர ஆப்ஷன்ஸ் வர்த்தகங்களும் நடைமுறையில் உள்ளன. தற்போது இவற்றுடன் 100 கிராம் ஒப்பந்தமும் இணைந்துள்ளது
இந்த சிறிய அளவிலான ஒப்பந்தம் வாயிலாக எஸ்.எம்.இ., நிறுவனங்களின் முதலீட்டுக்கான ஆரம்ப மூலதன தேவை குறையும்
ஒப்பந்த காலம் முடியும்போது பணமாகவோ அல்லது தரமான வெள்ளியாகவோ பெற்று கொள்ளலாம்
இந்தியாவின் வெள்ளி இறக்குமதி சார்பை குறைத்து, உள்நாட்டு மறுசுழற்சியை ஊக்குவிக்கும் நோக்கில், உள்நாட்டு வெள்ளி சுத்திகரிப்பாளர்களையும் தங்களோடு இணையுமாறு எம்.சி.எக்ஸ்., கேட்டுக்கொண்டுள்ளது.
