உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 26, 2026 12:00 AM
ADDED : நவ 25, 2026 11:24 PM

அ நிறம் | அளவு
சர்வதேச சந்தையில் உலோகங்களின் விலை சரிந்துள்ளதால், நேற்று வர்த்தகத்தில் முன்னணி உலோக நிறுவன பங்குகளின் விலை இறங்கியது.
சர்வதேச சந்தையில் அலுமினியத்தின் விலை இறங்கி வருகிறது. மேலும், தொழில்நுட்ப துறை பங்குகளில் ஏற்பட்ட சரிவாலும், சீனாவில் தேவை குறைந்திருப்பதாலும், தாமிரத்தின் விலை 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு இறங்கி உள்ளது. இதுதவிர, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதும் உலோகங்களின் விலைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் விளைவாக, நேற்று இந்திய சந்தையில் உலோக நிறுவன பங்குகள் சரிந்தன. மேலும், இத்துறைக்கான ‘நிப்டி மெட்டல்’ குறியீடு 2.04 சதவீத சரிவுடன் முடிவடைந்துள்ளது.
