தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மிட், ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்டுகள்

முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மிட், ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்டுகள்

முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மிட், ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்டுகள்


ADDED : ஆக 25, 2026 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 12:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களின் பார்வை, மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களின் பக்கம் பெருமளவில் திரும்பியுள்ளது.

2020 - 2021ம் நிதியாண்டில், புதிய போலியோ சேர்க்கையில், இவற்றின் பங்கு 2.91 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், புதிதாக இணைந்த முதலீட்டாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இப்பிரிவுகளையே தேர்வு செய்துள்ளனர் என, ஆம்பியின் ஆய்வறிக்கை சொல்கிறது.

அதில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜூலை 2026ல் ஈக்விட்டி பண்டுகளுக்கு வந்த மொத்த முதலீட்டில், 56 சதவீதம் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டுகளுக்கே சென்றுள்ளது. 2023ம் ஆண்டிற்கு பின், மொத்த ஈக்விட்டி முதலீட்டில் பாதியை தாண்டுவது இதுவே முதன்முறை.

நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் 'பி.எஸ்.இ., மிட்கேப் இன்டெக்ஸ்' 20 சதவீதமும், 'பி.எஸ்.இ., ஸ்மால்கேப் இன்டெக்ஸ்' 30 சதவீதமும் உயர்ந்துள்ளன. ஆனால், சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவை 8.50 முதல் 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் படையெடுக்க என்ன காரணம்?


1 பின்கேர் செயலிகள் வாயிலாக முதலீடு செய்யும் புதிய தலைமுறையினர், சமீபத்திய சிறப்பான செயல்பாடுகளை பார்த்து உடனடியாக முதலீடு செய்வது
2 பிரத்யேக துறைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் வலுவான காலாண்டு முடிவுகள்
3 கெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், ஜவுளி மற்றும் உற்பத்தி துறை நிறுவனங்களின் வளர்ச்சியில் பங்கேற்க முதலீட்டாளர்கள் இத்தகைய பண்டுகளை நாடுவது
4 இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள், அதிக லாபம் ஈட்டும் நோக்கில், அதிக அபாயம் கொண்ட இத்திட்டங்களில் அதிகம் முதலீடு செய்கின்றனர்.



பாதுகாப்பான அணுகுமுறை


மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் குறுகிய காலத்தில் அதிக லாபம் தந்தாலும், சந்தை சரிவின் போது பெரிய அளவிலான வீழ்ச்சியை சந்திக்க கூடியவை. கடந்தகால வருவாயை மட்டும் வைத்து அவசரப்பட்டு மொத்த முதலீட்டையும் செய்யக் கூடாது. முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்போலியோவில் லார்ஜ் கேப் பண்டுகளுக்கும் சரியான முக்கியத்துவம் கொடுத்து, சீரான முறையில் முதலீட்டை பிரித்து வைப்பதே பாதுகாப்பான அணுகுமுறை என, துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us