ADDED : அக் 21, 2025 12:27 AM

இந்திய சந்தையில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக, அன்னிய முதலீட்டாளர்களை சார்ந்தே செயல்பட்டு வந்த சந்தை, தற்போது முழுமையாக இந்திய முதலீட்டாளர்களின் முதலீட்டை நம்பி செயல்பட ஆரம்பித்துவிட்டது. இந்த மாறுதல், நீண்டகால அடிப்படையில், இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சியை உறுதிபடுத்துவதாக இருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, பின்வரும் பங்குகளை, இன்று நடைபெற உள்ள தீபாவளி சிறப்பு வர்த்தகத்தில், 12 மாத காலகட்டத்திற்கான திட்டத்துடன் முதலீடு செய்வதற்காக 'ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ்' பரிந்துரை செய்துள்ளது.
ரெய்ன்போ சில்ரன்ஸ் மெடிக்கேர்
சாதக அம்சங்கள்: சிசுக்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத்தை வழங்குவதில், சுலபத்தில் விரிவாக்கம் செய்யக்கூடிய அளவிலான 'அசெட்-லைட் ஹப்- அண்ட்-ஸ் போக்' மாடலில் செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் மருத்துவமைனையாக திகழ்வது
பரிந்துரைக்கும் விலை: ரூ.1,320க்கு குறைவாக
இலக்கு: ரூ.1,625
டாம்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
சாதக அம்சங்கள்: இந்தியாவின் முன்னணி எழுதுபொருட்கள் மற்றும் வரைவதற்கான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம். சிறந்த வினியோகத்திற்கான நெட்வொர்க்கை கொண்டிருப்பது; தயாரிக்கும் பல்வேறு விதமான பொருட்கள் மற்றும் உற்பத்தி அளவு ஆகிய இரண்டையும் விரிவாக்கம் செய்து கொண்டிருப்பது.
பரிந்துரைக்கும் விலை: ரூ.2,556-க்கு குறைவாக
இலக்கு: ரூ.3,110.
கே.இ.சி., இண்டர்நேஷனல்
சாதக அம்சங்கள்: அடுத்த 18 முதல் 24 மாதங்களில், நல்ல வருவாய் வருவதற்கான 'ஆர்டர் புக்' நிலவரமும்; பவர் டிரான்ஸ்மிஷன், சிவில் மற்றும் அயல்நாடுகளில் கிடைத்துள்ள ஒப்பந்த புள்ளிகள் போன்றவையும், சீரான வளர்ச்சிக்கு வழிவகை செய்யும்.
பரிந்துரைக்கும் விலை: ரூ.855-க்கு குறைவாக
இலக்கு: ரூ.1,030
சாலெட் ஹோட்டல்ஸ்
சாதக அம்சங்கள்: ஹோட்டல்கள், கமர்ஷியல் மற்றும் ரெசிடென்ஷியல் சொத்துக்களை வாடகைக்கு விடும் நிறுவனம். ஸ்ட்ராட்டஜிக்கான இடங்களில் சொத்துக்களை வைத்திருப்பது, நல்ல பிராண்ட் பார்ட்னர்களை கொண்டிருப்பது மற்றும் வேகமான விரிவாக்கங்களை செய்து வருவது.
பரிந்துரைக்கும் விலை: ரூ.941-க்கு குறைவாக
இலக்கு: ரூ.1,120
மிண்டா கார்ப் லிட்.,
சாதக அம்சங்கள்: அதிநவீன தொழில்நுட்பம் வாயிலாக, வாகன உதிரிபாகங்கள் துறையில் செயல்பட்டு, மொபிலிட்டி தீர்வுகளை வழங்கும் இந்த நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பிரீமியம் ஆட்டோ காம்போனென்ட் பிரிவில் விரிவாக்கங்கள் செய்து வருகிறது. கூட்டணிகள், ஏற்றுமதி மற்றும் சிறந்த தயாரிப்புகள் போன்றவற்றை கொண்டிருப்பது தனிச்சிறப்பு.
பரிந்துரைக்கும் விலை: ரூ.582-க்கு குறைவாக
இலக்கு: ரூ.690
பெடரல் பேங்க்
சாதக அம்சங்கள்: நடப்பு நிதியாண்டில், கடன் வழங்குவதில் வேகமான வளர்ச்சி, வராக்கடன் ஆகாத அளவிலான கடன்களை வழங்கியிருப்பது, கடன் - டிபாசிட் விகிதாசாரம் சாதகமாக உருவெடுப்பது, லாப சதவீதம் உயர்வதற்கான வாய்ப்பு.
பரிந்துரைக்கும் விலை: ரூ.207-க்கு குறைவாக
இலக்கு: ரூ.240
ஜே.எஸ்.டபுள்யு., எனர்ஜி
சாதக அம்சங்கள்: புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மற்றும் மின்சார சேமிப்பு வசதி என்ற இரண்டையும் வேகமாக விரிவாக்கம் செய்வது, கிளீன் எனர்ஜியை நோக்கிய பயணத்தில் ஒரு முன்னணி நிறுவனமாக இருப்பது
பரிந்துரைக்கும் விலை: ரூ.543-க்கு குறைவாக
இலக்கு: ரூ.625
கோபோர்ஜ் லிமிடெட்
சாதக அம்சங்கள்: அறிவிக்கப்பட்டுள்ள 'சிக்னிட்டி டெக்னாலஜிஸ்' நிறுவனத்துடனான இணைப்பு நிகழ்வானது, தரம் உறுதிசெய்தல் மற்றும் டெஸ்டிங் செய்யும் திறனை வெகுவாக அதிகரிக்கச் செய்யும். இது, இந்த நிறுவனத்தை ஒரு முழுமையான ஐ.டி., சேவையை வழங்கும் நிறுவனமாக உருவெடுக்கச் செய்யும்.
பரிந்துரைக்கும் விலை: ரூ.1,720-க்கு குறைவாக
இலக்கு: ரூ.1,980