ADDED : செப் 20, 2025 11:48 PM

ப ங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்கள் காரணமாக, அபாயம் குறைந்த மல்டி அசெட்ஸ் பண்டுகளில், மியூச்சுவல் பண்டு
முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றனர்.
உலகளாவிய சந்தைகளில் வரிவிதிப்பு, புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவை காரணமாக, நிச்சயமற்றத்தன்மை அதிகரித்து வருவதால், மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள், மல்டி அசெட்ஸ் மற்றும் டைனமிக் ஒதுக்கீடு பண்டுகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
மல்டி அசெட்ஸ் பண்டு என்பது பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் தங்கம் போன்ற வெவ்வேறு வகையான சொத்துக்களில் முதலீடு செய்யப்படுவதால், அபாயம் குறைவு என்பதால், முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.
இதே போன்று, டைனமிக் ஒதுக்கீடு பண்டுகள் என்பது, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சந்தை உயரும் போது பங்குகளிலும், சந்தை சரியும் போது பத்திரங்களிலும் அதிக முதலீடு மேற்கொள்ளப்படும்.
ரூ. 6,022
கோடி
2025 மார்ச் காலாண்டு
ரூ. 8,243
கோடி
2025 ஜூன் காலாண்டு
ரூ. 3,528
கோடி
2024 ஜூன் காலாண்டு