உள்ளடக்கத்திற்கு செல்ல

'மியூச்சுவல் பண்டு, எஸ்.ஐ.எப்.,' வினியோகஸ்தர்களுக்கு இனி ஒரே தேர்வு
'மியூச்சுவல் பண்டு, எஸ்.ஐ.எப்.,' வினியோகஸ்தர்களுக்கு இனி ஒரே தேர்வு
ADDED : ஜூலை 19, 2026 02:54 AM

அ நிறம் | அளவு
மியூச்சுவல் பண்டு மற்றும் சிறப்பு முதலீட்டு நிதி (எஸ்.ஐ.எப்.,) வினியோகஸ்தர்களுக்கான, 'என்.ஐ.எஸ்.எம்., சீரிஸ்-வி-டி.,' எனும் பொதுவான தகுதி தேர்வை 'என்.ஐ.எஸ்.எம்.,' அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தேர்வு ஜூலை, 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுவரை எஸ்.ஐ.எப்., வினியோகஸ்தராக செயல்பட, மியூச்சுவல் பண்டு மற்றும் டெரிவேட்டிவ்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் தனித்தனியாக தேர்ச்சி பெற வேண்டியிருந்தது.
இனி இரண்டுக்கும் பதிலாக ஒரே தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மியூச்சுவல் பண்டு மற்றும் டெரிவேட்டிவ்ஸ் ஆகிய இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த புதிய தேர்வை எழுத வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
