ADDED : ஜன 23, 2026 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மி யூச்சுவல் பண்டு முதலீடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 'பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா' நிறுவனம் ' சேஞ்ச் தி சோச்' என்ற பெயரில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான விழிப்புணர்வு பிரசாரப் பயணத்தை துவங்கியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம், இந்தியாவில் தன் 30 ஆண்டுகால சேவையை கொண்டாடும் வகையில், அடுத்த 30 நாட்களில் 21 நகரங்களை கடந்து கிட்டத்தட்ட 4,000 கி.மீ துாரம் வரை இந்த பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

