தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/புதிய வருமான வரி சட்டம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

புதிய வருமான வரி சட்டம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

புதிய வருமான வரி சட்டம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்


ADDED : பிப் 09, 2026 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 02:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய வருமான வரி சட்டம் 2025, வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், வருமான வரி வரைவு சட்டம் மற்றும் புதிய வரைவு படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள், வரும் 22ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1962ம் ஆண்டு முதல் அமலில் உள்ள தற்போதைய வருமான வரி சட்டத்தில், மொத்தம் 511 விதிகள், 399 படிவங்கள் இருந்தன. தற்போதைய புதிய வருமான வரி வரைவு சட்டத்தில், அவை 333 விதிகள், 190 படிவங்களாக குறைக்கப்பட்டுள்ளன.

ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லும் விதிகளை ஒன்றிணைத்து, இந்த குறைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வந்தால், வரித்தாக்கல் எளிமையாவதோடு, தேவையற்ற சிரமங்கள் குறையும். இதனால், நேரமும், செலவும் மிச்சமாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வரைவு விதிகள் குறித்து https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/ita-comprehensive-review என்ற முகவரி வாயிலாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us