ரூ.28,500 கோடி திரட்ட வரும் இந்த வார புதிய பங்கு வெளியீடுகள்
ரூ.28,500 கோடி திரட்ட வரும் இந்த வார புதிய பங்கு வெளியீடுகள்
ADDED : அக் 04, 2025 11:08 PM

பங்குச் சந்தையில், இந்த வாரம் ஐந்து நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, கிட்டத்தட்ட 28,500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளன.
1.டாடா கேப்பிட்டல் :
இந்நிறுவனம் 15,512 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட வருகிறது. அக்.6 - 8 வரை முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்கு ஒன்றின் விலை 310 -- 326 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ., இதுவாகும்.
2.எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா:
தென்கொரியாவைச் சேர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பாளரான எல்.ஜி.,எலக்ட்ரானிக்ஸ், 11,607 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட வருகிறது. அக்.,7 - 9 வரை பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்கு ஒன்றின் விலை 1,080 - 1,140 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
3. ருபிகான் ரிசர்ச் :
மஹாராஷ்டிராவின் தானேவை தலைமையிடமாக கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான ருபிகான் ரிசர்ச், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 1,377 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளது. அக்.,9--13 வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். பங்கு ஒன்றின் விலை 461-- 485 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது.
4. ஆனந்தம் ஹைவேஸ் டிரஸ்ட் இன்வைட்.,
கட்டுமான நிறுவனமான இது 400 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு, அக்.,7-9 வரை விண்ணப்பிக்கலாம். பங்கு ஒன்றின் விலை 98 --100 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இவை தவிர, எஸ்.எம்.இ., பிரிவில், ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான மிட்டல் செக்ஷன்ஸ், 53 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு வர உள்ளது. அக்.,7 --9 வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். பங்கு ஒன்றின் விலை 136 --143 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பி.எஸ்.இ., எஸ்.எம்.இ., பிரிவில் இந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.