தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/மருந்து துறை பங்குகளில் புதிய எழுச்சி: ஆய்வறிக்கைகள் தகவல்

மருந்து துறை பங்குகளில் புதிய எழுச்சி: ஆய்வறிக்கைகள் தகவல்

மருந்து துறை பங்குகளில் புதிய எழுச்சி: ஆய்வறிக்கைகள் தகவல்


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 10:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்றைய பங்கு வர்த்தகத்தில் ‘பார்மா’ துறை பங்குகள் ஏற்றத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக, ஒப்பந்த அடிப்படையிலான மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி (சி.டி.எம்.ஓ.,) துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வலுவான காலாண்டு முடிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து, ‘நிப்டி பார்மா’ குறியீடு, 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து, அதிகபட்சமாக 29,224 என்கிற நிலையில் வர்த்தகமானது. வர்த்தக முடிவில், 1.65 சதவீத ஏற்றத்துடன் 28,561 புள்ளிகளில் நிறைவடைந்தது.

கணிப்பு



 டிவிஸ் லேப்ஸ்’ நிறுவனத்தின் சி.டி.எம்.ஓ., பிரிவு, ஆண்டு அடிப்படையில், 50 சதவீத வளர்ச்சியையும், ஜெனரிக்ஸ் பிரிவு 18 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. கொரோனா காலத்துக்கு பின், ‘எபிட்டா’ வரம்பு உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, இந்த பங்கை ‘வாங்குங்கள்’ என்கிற பரிந்துரையுடன், இலக்கு விலையை 12,550 ரூபாயாக உயர்த்தியுள்ளது ‘ஜெப்ரீஸ்’ தரகு நிறுவனம்.

 ஒப்பந்த அடிப்படையிலான ஆராய்ச்சி (சி.ஆர்.ஓ.,) மற்றும் சி.டி.எம்.ஒ., பிரிவுகளில் சிறப்பான வளர்ச்சி, புதிய மூலக்கூறுகள் வணிக கட்டத்திற்கு முன்னேறியிருப்பதை சுட்டிக்காட்டி, ‘சாய் லைப் சயின்சஸ்’ நிறுவனத்தின் 2027- – 2029க்கான இ.பி.எஸ்., மதிப்பீட்டை உயர்த்தி, இலக்கு விலையை 2,050 ரூபாயாக நிர்ணயித்துள்ளது, ஜெப்ரீஸ்.

 ‘லாரஸ் லேப்ஸ்’ நிறுவனம் பாரம்பரிய ஏ.பி.ஐ., வணிகத்திலிருந்து சி.டி.எம்.ஓ., தளமாக வேகமாக மாறி வருகிறது. 2028 -– -2029க்குள் இந்த பிரிவின் வருவாய் பங்களிப்பு 50 ச தவீதமாக உயரக்கூடும் என தெரிவித்து, ‘சாய்ஸ்’ தரகு நிறுவனம் இதன் இலக்கு விலையை 2,500 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.

விலை உயர்ந்த பார்மா பங்குகள் - டாப் 5 (09.11.2026 நிலவரப்படி)

பங்குகள் | விலை (ரூ.)

சாய் லைப் சயின்சஸ் | 1,836.80 (5.32 %)

கிளாண்டு பார்மா | 3,302.40 (5.41 %)

டிவிஸ் லேப்ஸ் | 11,565.50 (4.22 %)

லாரஸ் லேப்ஸ் | 2,454.00 (3.54 %)

மேன்கைண்டு பார்மா | 2,668.30 (3.31 %)

கடந்த 12 வர்த்தக நாட்களில் பார்மா பங்குகளில் பெரும்பாலானவை 18% முதல் 25% வரை லாபத்தை பதிவு செய்துள்ளன

நல்ல அறிகுறி


உலகளாவிய சந்தை சவால்களுக்கு மத்தியிலும், இந்திய பார்மா துறை நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சி.டி.எம்.ஓ., வாயிலாக தொடர்ந்து வலுவான வளர்ச்சியை பெற்று வருவது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல அறிகுறி என, இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



‘டிவிஸ் லேப்ஸ்’ சந்தை மதிப்பு


ரூ.3 லட்சம் கோடியை தாண்டியது
பார்மா துறையை சேர்ந்த முன்னணி நிறுவனமான ‘டிவிஸ் லேப்ஸ்’, செப்டம்பர் சிறப்பான காலாண்டு முடிவுகளின் வெளியீட்டை தொடர்ந்து, தீபாவளி சிறப்பு வர்த்தகம் மற்றும் நேற்றைய பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட தொடர் எழுச்சியால், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக மூன்று லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதன் காரணமாக, சன் பார்மா நிறுவனத்திற்கு (ரூ.4.6 லட்சம் கோடி) பின், பார்மா துறையில் மூன்று லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை தாண்டிய இரண்டாவது நிறுவனம் என்ற பெருமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த 12 வர்த்தகத்தின் இதன் பங்கு விலை 32 சதவீதம் ஏற்றத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us