முதன்மை தளத்துக்குள் நுழைந்தது ‘பிரைட் அவுட்டோர் மீடியா’
முதன்மை தளத்துக்குள் நுழைந்தது ‘பிரைட் அவுட்டோர் மீடியா’
UPDATED : நவ 10, 2026 12:00 AM
ADDED : நவ 09, 2026 10:06 PM
இந்தியாவின் ‘அவுட் ஆப் ஹோம்’ விளம்பரங்கள் (நுகர்வோர், தங்கள் வீட்டை விட்டு வெளியே இருக்கும்போது அவர்களை சென்றடையும் அனைத்து வகையான வெளிப்புற விளம்பரங்களையும் இது குறிக்கிறது) துறையில் முன்னோடியாக விளங்கும் ‘பிரைட் அவுட்டோர் மீடியா’ நிறுவனம், தனது பங்குகளை எஸ்.எம்.இ., தளத்தில் இருந்து பி.எஸ்.இ., மற்றும் என்.எஸ்.இ., சந்தைகளின் முதன்மை தளத்துக்கு மாற்றியுள்ளது.
கடந்த 2023 மார்ச் மாதம் எஸ்.எம்.இ., தளத்தில் பட்டியலிடப்பட்ட முதல் ‘அவுட்டோர்’ விளம்பர நிறுவனம் என்ற பெருமையை பெற்ற இந்நிறுவனம், தற்போது முதன்மை தளத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான டிஜிட்டல் எல்.இ.டி., விளம்பர பலகைகளையும், 1,350க்கும் மேற்பட்ட பெரிய விளம்பர பலகைகளையும் இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
