
ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல்
'ஐ. சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், 'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் காங்ளோமெரேட் பண்டு' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பெரிய இந்திய வணிக குழுமங்களில் முதலீடு செய்யப்பட உள்ளது.
இந்த குழுமங்கள் நிறுவனர்களால் நடத்தப்படுபவையாக இருக்கும் என்றும்; இவற்றின் கீழ் குறைந்தது இரண்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் அக்டோபர் 3 முதல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மோதிலால் ஓஸ்வால்
'மோ திலால் ஓஸ்வால் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், 'மோதிலால் ஓஸ்வால் கன்சம்ப்ஷன் பண்டு' என்ற பெயரில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியர்களின் நுகர்வு முறையில் ஏற்பட்டு வரும் அடிப்படை மாற்றங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த பண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் இன்று முதல், வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய். எஸ்.ஐ.பி., முறையில் நாள், ஒன்றுக்கு 100 ரூபாய், வாரத்துக்கு 500 ரூபாய் என்ற வகையிலும் விண்ணப்பிக்கலாம்.