UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 10:16 PM
எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு
பாதுகாப்பு துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யும் புதிய ‘பண்டு ஆப் பண்டு’ திட்டத்தை ‘எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு’ நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்திட்டம் தனது நிதியில் குறைந்தபட்சம் 95 சதவீதத்தை ‘எஸ்.பி.ஐ., பி.எஸ்.இ., இந்தியா டிபென்ஸ் இ.டி.எப்.,’ திட்டத்தில் முதலீடு செய்யும்.
பண்டு பெயர்: எஸ்.பி.ஐ., பி.எஸ்.இ., இந்தியா டிபென்ஸ் இ.டி.எப்., எப்.ஓ.எப்.,
தொடங்கும் தேதி : நவ., 16
முடியும் தேதி : நவ., 30
குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000
ரிஸ்க் தன்மை : மிக அதிகம்.
ஸ்டாண்டர்டு சார்டர்டு
‘ஸ்டாண்டர்டு சார்டர்டு’ நிறுவனம் கிப்ட் சிட்டி வாயிலாக நான்கு சர்வதேச முதலீட்டு பண்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளது. செல்வந்தர்களை குறிவைத்து கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டங்கள், சர்வதேச பங்குகள், கடன் பத்திரங்கள், கமாடிட்டி சந்தை உள்ளிட்ட சொத்துகளில் கலந்து முதலீடு செய்ய உள்ளன.
