'நிப்டி 500 அகிம்சா' குறியீடு என்.எஸ்.இ., அறிமுகம்
'நிப்டி 500 அகிம்சா' குறியீடு என்.எஸ்.இ., அறிமுகம்
ADDED : ஜூலை 12, 2026 01:40 AM

அகிம்சை நெறிமுறைகளை பின்பற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்காக, தேசிய பங்குச்சந்தையின் துணை நிறுவனமான 'என்.எஸ்.இ., இண்டீசஸ்' 'நிப்டி 500 அகிம்சா' என்ற புதிய தீமேட்டிக் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் நெறிமுறை சார்ந்த முதலீடுகள் அதிகரித்து வரும் சூழலில், தீங்கற்ற மற்றும் சமூக பொறுப்புள்ள நிறுவனங்களை கொண்ட இக்குறியீடு, அறநெறி முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைவதோடு, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் இதன் அடிப்படையில் புதிய இண்டெக்ஸ் பண்டுகள் மற்றும் இ.டி.எப்., திட்டங்களை வரும் நாட்களில் அறிமுகம் செய்யவும் வழிவகுத்துள்ளது என, நிபுணர்கள் கருதுகின்றனர்.
'நிப்டி 500' தொகுப்பில் இருந்து கடுமையான வடிகட்டல் முறைகள் வாயிலாக தகுதியான நிறுவனங்கள் மட்டுமே இக்குறியீட்டில் சேர்க்கப்படும். இந்த குறியீட்டிற்கான அடிப்படை தேதியாக 2016 ஏப்ரல் 1ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப அடிப்படை மதிப்பு 1,000 புள்ளிகள் ஆகும்.
முற்றிலும் தவிர்க்கப்படும் துறைகள்
ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு
இறைச்சி, கோழிப்பண்ணை, மீன்பிடித்தல் மற்றும் தோல் பொருட்கள்
புகையிலை, மதுபானம் மற்றும் சூதாட்டம்.
