14 மாதங்களுக்கு பின் மீண்டும் உச்சம் தொட்ட நிப்டி
14 மாதங்களுக்கு பின் மீண்டும் உச்சம் தொட்ட நிப்டி
ADDED : நவ 21, 2025 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தைகள் இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 446 புள்ளிகள் உயர்ந்து 85,632 புள்ளிகளிலும், தேசிய பங்கு சந்தையின் நிப்டி 139 புள்ளிகள் அதிகரித்து 26,192 புள்ளிகளி லும் நிறைவடைந்தன.
வர்த்தகத்தின் இடையில் சென்செக்ஸ் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 85,699.73 புள்ளிகளை தொட்டது. நிப்டி 2024ம் ஆண்டு செப்டம்பருக்கு பின், முதல்முறையாக 26,200 என்ற புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது.
ஐச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பின்சர்வ், ரிலையன்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள், நிப்டி 50 குறியீடு உயர முக்கிய காரணமாக அமைந்தது.

