UPDATED : அக் 06, 2026 06:57 AM
ADDED : அக் 05, 2026 11:14 PM

நே ற்றைய வர்த்தகத்தில் பாதுகாப்பு துறை குறியீடான 'நிப்டி இந்தியா டிபன்ஸ்' 0.68 சதவீதம் வரை சரிந்து, 9,080.65 புள்ளிகள் வரை சென்றது.
எனினும், வர்த்தகத்தின் இறுதியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், அஸ்ட்ரா மைக்ரோவேவ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் ஏற்றத்தால் சற்று மீண்டது.
வர்த்தக முடிவில் இக்குறியீடு 37.95 புள்ளிகள் (0.42%) அதிகரித்து, 9,180.50 புள்ளிகளாக நிலைபெற்றது.
பாதுகாப்பு துறை பங்குகள் கடந்த ஓராண்டில் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து உள்ளன. இதனால், குறுகிய கால வர்த்தகர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை பதிவு செய்கின்றனர்.
இதனால் தற்காலிக சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய பாதுகாப்பு துறையில் அரசின் 'ஆத்மநிர்பார் பாரத்' (உள்நாட் டு உற்பத்தி) கொள்கை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் வலுவாக இருப்பதால், இத்தகைய சரிவுகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு தரமான பங்குகளை சரியான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பாக அமையக்கூடும் எனவும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
