UPDATED : அக் 06, 2026 06:57 AM
ADDED : அக் 05, 2026 11:06 PM
தொ டர்ந்து நான்கு நாட்களாக சரிவை சந்தித்து வந்த 'பஜாஜ் பைனான்ஸ்' பங்குகள், நேற்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக 995 ரூபாய் வரை உயர்ந்து, முடிவில் 2.29 சதவீதம் உயர்ந்து 970 ரூபாய்க்கு வர்த்தகமானது.
சர்வதேச தரகு நிறுவனமான 'ஜே.பி.மோர்கன்' இந்நிறுவனத்தின் வளர்ச்சி சீராக உள்ளது என்பதை சுட்டிக்காட்டி இதன் இலக்கு விலையை 1,310 ரூபாயாகவும், ஜெப்ரீஸ் தரகு நிறுவனம் 1,280 ரூபாயாகவும் அறிவித்ததே விலை உயர்வுக்கு காரணமாக தெரிகிறது.
செப்டம்பர் காலாண்டில் புதிதாக 44.2 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதன் வாயிலாக மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 12.88 கோடியாக உயர்ந்துள்ளது. இக்காலாண்டில் 1.34 கோடி புதிய கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது, கடந்த ஆண்டை காட்டிலும் 11 சதவீதம் வளர்ச்சியாகும். அதே போல, நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 5.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் 37,800 கோடி ரூபாய் வளர்ச்சி கண்டுள்ளது. டிபாசிட் மதிப்பு 69,750 கோடி ரூபாயை தொட்டு உள்ளது.
