உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 08, 2026 12:00 AM
ADDED : அக் 07, 2026 10:44 PM

அ நிறம் | அளவு
பங்கு சந்தை இறங்கி வருவதால், நிப்டி குறியீட்டின் மதிப்பு நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ., தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலும், அமெரிக்க கடன் பத்திரங்களின் வருமானம் உயர்ந்ததாலும், கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் நிப்டி குறியீடு 5.20 சதவீதம் இறங்கியுள்ளது.
இதனால், நிப்டியின் 12 மாத ‘பார்வர்டு பி.இ.,’ விகிதம் அதன் 20 ஆண்டு சராசரிக்கு அருகே நெருங்கியுள்ளது. மேலும், நிப்டி குறியீட்டில் உள்ள 50 பங்குகளில், 30 பங்குகள் அவற்றின் 10 ஆண்டு சராசரி பி.இ., விகிதத்துக்கு கீழே வர்த்தகமாகின்றன.
