ADDED : டிச 16, 2025 06:08 AM

நிப்டி
ஆரம்பத்திலிருந்தே இறக்கத்திலேயே நடைபெற்று வந்த நிப்டி, நாளின் இறுதியில் 19 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 8 ஏற்றத்துடனும்; 1 மாற்றம் ஏதுமின்றியும்; 7 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு, அதிகபட்சமாக 0.49 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி 500' மாற்றம் ஏதுமின்றியும், 'நிப்டி மிட்கேப்100' குறியீடு அதிக பட்சமாக 0.12 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும் 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் நிப்டி மீடியா குறியீடு அதிக பட்சமாக 1.79 சதவிகித ஏற்றத்துடனும் நிப்டி ஆட்டோ குறியீடு அதிக பட்சமாக 0.91 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது.
வர்த்தகம் நடந்த 3,237 பங்குகளில் 1,665 ஏற்றத்துடனும், 1,468 இறக்கத்துடனும்; 104 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஏற்றம் காண்பதற்கான உந்துதல் குறைந்துவிட்டாலுமே இறங்கும் என்று உறுதியாக கூறமுடியாத அளவிற்கான டெக்னிக்கல் சூழலே நிலவுகிறது. மறுபடியும் 26,100 என்ற தடையை வால்யூமுடன் வேகமாக தாண்டினால் மட்டுமே ஏற்றம்தொடர வாய்ப்புள்ளது. அதுவரையில் 25,750 வரை சென்று திரும்பவதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
டாடா ஸ்டீல் 172.70 0.81
எட்டர்னல் 298.05 0.00
ஆயில் & நேச்சுரல் கேஸ் கார்ப்போரேஷன் 235.20 -2.82
என்.டி.பி.சி., 323.50 -1.55
எச்.டி.எப்.சி., பேங்க் 995.00 -6.50
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 83.82 1.53
ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 104.9 0.56
எஸ் பேங்க் 21.77 -0.15
சுஸ்லான் எனர்ஜி 53.09 0.07
என்.எம்.டி.சி., 78.42 0.48
நிப்டி ஸ்மால் கேப் 50 (எண்ணிக்கை)
என்.பி.சி.சி., (இந்தியா) 115.60 6.03
ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் 376.00 19.05
பந்தன் பேங்க் 151.45 1.88
ஐநாக்ஸ் விண்ட் 125.68 1.07
கேனெஸ் டெக்னாலஜிஸ் 4,195.50 -70.00
மற்ற சில பங்குகளின் விலை விவரம்
சி.இ.எஸ்.சி., 171.09 1.02
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 169.00 5.33
ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் 796.50 10.85
குஜராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் 534.65 14.75
டைம் டெக்னோ பிளாஸ்ட் 190.20 3.37
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 25,930.05 26,047.15 25,904.75 26,027.30
ஆதரவு 25,930 25,850 25,790
தடுப்பு 26,080 26,130 26,185

