
'அசோக் லேலண்டு' ஓராண்டில் 53% உயர்வு
'அசோக் லேலண்டு' நிறுவனத்தின் பங்கு விலை நடப்பாண்டு மட்டும் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 8.50 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, சென் செக்ஸை காட்டிலும் அசோக் லேலண்டு நிறுவனத்தின் பங்கு விலை அதிக வளர்ச்சி கண்டுள்ளது.
'தி வெல்த் கம்பெனி' கோல்டு இ.டி.எப்.,
'தி வெல்த் கம்பெனி மியூச்சுவல் பண்டு' நிறுவனம், புதிய கோல்ட் இ.டி.எப்., முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் உள்நாட்டு தங்கம் விலையை பிரதிபலித்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதலீட்டாளர்கள் குறைந்தபட்சமாக 5,000 ரூபாய் முதலீடு செய்யலாம்.
'குஜராத் கிட்னி' ஐ.பி.ஓ., பங்கு விலை ரூ. 108 - 114
'குஜராத் கிட்னி அண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி' நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வரும் 22ம் தேதி துவங்குகிறது. முதலீட்டாளர்கள் டிசம்பர் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 108 - 114 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஐ.பி.ஓ., வாயிலாக 250.80 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் குறைந்தபட்சமாக 128 பங்குகள் கேட்டு 14,592 ரூபாய்க்கு விண்ணப்பிக்கலாம்.
ஏழு நிறுவனங்களுக்கு செபி அனுமதி
புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்ட, ஏழு நிறுவனங்களுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது. 'யசோதா ஹெல்த்கேர் சர்வீசஸ், பியூசன் சி.எக்ஸ்., ஓரியன்ட் கேபிள்ஸ், டர்டில்மின்ட் பின்டெக் சொல்யூஷன்ஸ், ஆர்.எஸ்.பி., ரீடெய்ல் இந்தியா, எஸ்.எப்.சி., என்விரான்மென்டல் டெக்னாலஜிஸ், லோஹியா கார்ப்பரேஷன்' ஆகிய ஏழு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

