வரி பிடித்தத்தை தவிர்ப்பதற்கான படிவம் இனி 15ஜி, 15ஹெச் இல்லை; 121 அறிமுகம்
வரி பிடித்தத்தை தவிர்ப்பதற்கான படிவம் இனி 15ஜி, 15ஹெச் இல்லை; 121 அறிமுகம்
ADDED : ஏப் 21, 2026 12:35 AM

வ ருமான வரி செலுத்துவோர், தங்களின் வருமானம் வரி வரம்புக்குள் வராத பட்சத்தில், வங்கிகள் அல்லது பிற நிறுவனங்கள் வாயிலாக, டி.டி.எஸ்., பிடிப்பதை தவிர்க்க, வருமான வரித்துறை படிவம் 121ஐ அறிமுகம் செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இருந்து, 15ஜி, 15ஹெச் படிவத்துக்கு பதிலாக இந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும்.
முக்கிய 10 அம்சங்கள் 1 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு '15ஜி என்றும், முதியவர்களுக்கு 15ஹெச்' என்றும் இருந்த தனித்தனி படிவங்களுக்கு மாற்றாக இனி 'படிவம் 121'
2 ஒரு நிதியாண்டில் ஈட்டும் மொத்த வருமானத்துக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றால் மட்டுமே, இந்த படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
3 இதன் வாயிலாக வங்கி வட்டி, வாடகை அல்லது பிற வருமானங்களில் வரி பிடிக்கப்படுவதை தவிர்க்கலாம்
4 இந்திய குடிமக்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்;
5 பி.எப்., தொகை, பென்ஷன், வாடகை, வங்கி வட்டி, மியூச்சுவல் பண்டு மற்றும் எல்.ஐ.சி., வருமானம் போன்றவற்றுக்கு இது பொருந்தும்
6 படிவம் 121ல் பான் எண்ணை குறிப்பிடுவது அவசியம்; பான் எண் இல்லையென்றால், இந்த படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதோடு, அதிகபட்ச வரி பிடிக்கப்படும்
7 வரி பிடிக்கும் வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களிடம் நேரடியாக படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்; அல்லது ஆன்லைன் வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம்
8 ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ஒருமுறை இந்த படிவத்தை புதிதாக சமர்ப்பிக்க வேண்டும்; அந்தந்த நிதியாண்டின் துவக்கத்திலேயே சமர்ப்பிப்பது சிறந்தது
9 சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு படிவத்திற்கும் ஒரு தனித்துவ அடையாள எண் ஒதுக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்படும்
1 0 வரி செலுத்துவோருக்கு குழப்பங்களை குறைக்கவும், வேலையை சுலபமாக்கவும் வருமான வரித்துறை இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
