sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

'நான் -- பெஞ்ச்மார்க்' குறியீடுகளில் மாற்றம் செபியின் அடுத்த அதிரடி நடவடிக்கை

/

'நான் -- பெஞ்ச்மார்க்' குறியீடுகளில் மாற்றம் செபியின் அடுத்த அதிரடி நடவடிக்கை

'நான் -- பெஞ்ச்மார்க்' குறியீடுகளில் மாற்றம் செபியின் அடுத்த அதிரடி நடவடிக்கை

'நான் -- பெஞ்ச்மார்க்' குறியீடுகளில் மாற்றம் செபியின் அடுத்த அதிரடி நடவடிக்கை


UPDATED : நவ 01, 2025 01:59 AM

ADDED : நவ 01, 2025 01:55 AM

Google News

UPDATED : நவ 01, 2025 01:59 AM ADDED : நவ 01, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சந்தையில், 'நிப்டி 50, சென்செக்ஸ்' போன்ற 'பெஞ்ச்மார்க்' குறியீடுகளைத் தவிர, பல 'நான் - -பெஞ்ச்-மார்க்' குறியீடுகள் உள்ளன. இவை எவ்வாறு கணக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது குறித்த ஒழுங்கு நெறிமுறைகளை செபி வெளியிட்டுள்ளது.

டெரிவேட்டிவ் (எப் அண்டு ஓ) சந்தையில், நான்- - பெஞ்ச் மார்க் குறியீடுகள் வர்த்தகத்துக்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்றால், இந்தக் குறியீடுகள் பாதுகாப்பாகவும்; நம்பகத்தன்மையுடனும் கணக்கீடு செய்யப்படவேண்டும். எனவே, இது குறித்த பொதுமக்கள் கருத்தை, கடந்த ஆகஸ்ட் மாதத்தி-ல் கேட்டிருந்த நிலையில், தற்போது, எவ்வாறு கணக்கீடு செய்யப்படவேண்டும் என்பது குறித்த ஒழுங்கு நெறிமுறைகளை செபி வெளியிட்டுள்ளது.

'நான் - பெஞ்ச்மார்க்' குறியீடுகள் மி யூச்சுவல் பண்டை நிர்வகிக்கும் பண்டு மேனேஜர்கள் மற்றும் போர்ட்போலியோ மேனேஜர்களின் போர்ட்போலியோக்கள் எவ்வாறு லாபம் தந்துள்ளது என்பதை ஓப்பிட்டுப் பார்க்க 'நிப்டி 50 , சென்செக்ஸ்' போன்ற பெஞ்ச் மார்க்குகள், உதவும். இவைதவிர, பல நான் - பெஞ்ச்மார்க் குறியீடுகள் அதாவது, 'நிப்டி பேங்க், பேங்க்எக்ஸ், பின்நிப்டி' போன்றவையும் உள்ளன.



வங்கி பங்குகள் ஏற்றம் பேங்க் நிப்டி குறியீடுக்கான புதிய விதிகளை செபி அறிவித்துள்ளதால், பொதுத்துறை வங்கி பங்குகளின் விலை நேற்று கணிசமாக உயர்ந்தன. செபியின் புதிய விதிகளால், 'யூனியன் பேங்க், எஸ் பேங்க், இந்தியன் பேங்க், பேங்க் ஆப் இந்தியா' போன்ற பொதுத்துறை வங்கிகள் இந்த குறியீட்டில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுத்துறை வங்கி பங்குகளின் குறியீடு 2 சதவீதம் வரை உயர்ந்தது. வங்கிகள் பங்கு விலை சதவீதம்(உயர்வு) யூனியன் வங்கி ரூ.148.36 4.24% கனரா வங்கி ரூ.136.69 2.86% எஸ் வங்கி ரூ.22.77 2.43% பேங்க் ஆப் இந்தியா ரூ.140.00 0.84% இந்தியன் வங்கி ரூ.859.50 0.54%



நிபந்தனைகள்


 குறியீட்டில், குறைந்தது 14 நிறுவனப் பங்குகள் இருக்க வேண்டும்

 அதிகபட்சமாக, ஒரு நிறுவனத்தின் வெயிட்டேஜ் அதாவது பங்களிப்பு 20 சதவீதம் அல்லது அதற்கு கீழே இருக்க வேண்டும்

 முதல் மூன்று நிறுவனங்களின் மொத்த பங்களிப்பு 45 சதவீதம் அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும்

 மீதமுள்ள 11 நிறுவனங்களின் பங்களிப்பு முதல் மூன்றைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும்-

 எந்த இரண்டு நிறுவனத்தின் பங்குகளும் சம பங்களிப்பை கொண்டிருக்கக் கூடாது

 பங்கு சந்தைகள் 30 நாட்களுக்குள் தங்களுடைய முன்மொழிவுகளை செபியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய விதிமுறைகளின்படி, 14 நிறுவன பங்குகள் இருக்க வேண்டும். 12 நிறுவனங்கள் தான் இருக்கின்றன. இன்னும் 2 நிறுவனங்கள் புதிதாக சேர்க்கப்பட வேண்டும்

காலக்கெடு


இந்த மாற்றங்கள், 'பேங்க் எக்ஸ், பின்நிப்டி' குறியீடுகளில், டிசம்பர் 31ம் தேதிக்குள்ளாகவும்; 'நிப்டி பேங்க்' குறியீட்டில் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள்ளாகவும் செய்து முடிக்க வேண்டும் என்று செபி கூறியுள்ளது.

ஏன் அவசியம்?


 ஒரு சில நிறுவனங்களின் அதிக பங்களிப்பு, குறியீட்டில் செயற்கையான ஏற்ற - இறக்கங்களை எளிதாக ஏற்படுத்தும் வாய்ப்பைத் தவிர்க்க

 ஒரு குறியீடானது, அந்தத் துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் உண்மையான பிரதிநிதித்துவம் கொண்டதாக இருக்க உதவுவதற்கு

பயன்


இந்த விதிமுறைகள், டெரிவேட்டிவ் சந்தையில், நான் - பெஞ்ச்மார்க் குறியீடுகளை மேலும் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும் மாற்றும் என கருதப்படுகிறது.

வங்கி பங்குகள் ஏற்றம்


பேங்க் நிப்டி குறியீடுக்கான புதிய விதிகளை செபி அறிவித்துள்ளதால், பொதுத்துறை வங்கி பங்குகளின் விலை நேற்று கணிசமாக உயர்ந்தன. செபியின் புதிய விதிகளால், 'யூனியன் பேங்க், யெஸ் பேங்க், இந்தியன் பேங்க், பேங்க் ஆப் இந்தியா' போன்ற பொதுத்துறை வங்கிகள் இந்த குறியீட்டில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுத்துறை வங்கி பங்குகளின் குறியீடு 2 சதவீதம் வரை உயர்ந்தது.

'நான் - பெஞ்ச்மார்க்' குறியீடுகள்


மியூச்சுவல் பண்டை நிர்வகிக்கும் பண்டு மேனேஜர்கள் மற்றும் போர்ட்போலியோ மேனேஜர்களின் போர்ட்போலியோக்கள் எவ்வாறு லாபம் தந்துள்ளது என்பதை ஓப்பிட்டுப் பார்க்க 'நிப்டி 50 , சென்செக்ஸ்' போன்ற பெஞ்ச் மார்க்குகள், உதவும். இவைதவிர, பல நான் - பெஞ்ச்மார்க் குறியீடுகள் அதாவது, 'நிப்டி பேங்க், பேங்க்எக்ஸ், பின்நிப்டி' போன்றவையும் உள்ளன.






      Dinamalar
      Follow us