ADDED : அக் 09, 2025 12:22 AM

இ னி, ஸ்மார்ட் கண்ணாடி வாயிலாகவே பணம் செலுத்தும் வசதியை, 'நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' அறிமுகம் செய்திருக்கிறது.
அதாவது, இனி பணம் செலுத்த கைகளுக்கு வேலை இல்லை. ஒரு பொருளை அல்லது சேவையை வாங்க முடிவு செய்தால், 'பணத்தை கொடுத்து விடு' என்று சொன்னாலே போதுமானது. யு.பி.ஐ., வாயிலாக தானாகவே நடைபெற்று முடிந்துவிடும்.
இது பற்றிய தகவலை, ஆர்.பி.ஐ., துணை கவர்னர் டி.ரவி சங்கர், தற்போது நடைபெற்று வரும் 'குளோபல் பின்டெக் பெஸ்ட் 2025'ல் தெரிவித்தார். இந்த வசதியை 'பார், பேசு, பணம் செலுத்து' என்று அழைக்கின்றனர்.
இதன்படி, ஸ்மார்ட் கண்ணாடி வழியாக, க்யூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்து, பணம் கொடுப்பதற்கான உத்தரவை குரல் வாயிலாக கொடுத்தால் போதும். இதற்கு, ஒரு தொலைபேசியோ, பின் நம்பரோ தேவையில்லை.
ஸ்மார்ட் கண்ணாடியோடு 'யு.பி.ஐ., லைட்' என்ற மென்பொருளை பொருத்தி, ஆக்டிவேட் செய்தால் போதும். அதன் பின்னர் மூக்கு கண்ணாடி வாயிலாகவே பணம் செலுத்தலாம்.