என்.எஸ்.இ., - ஐ.பி.ஓ., தகவலால் பி.எஸ்.இ., பங்கு சரிவு
என்.எஸ்.இ., - ஐ.பி.ஓ., தகவலால் பி.எஸ்.இ., பங்கு சரிவு
ADDED : ஜூன் 18, 2026 02:07 AM

'என். எஸ்.இ.,' நிறுவனம் ஐ.பி.ஓ., ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியானதால், நேற்று அதன் போட்டியாளரான 'பி.எஸ்.இ.,' பங்கு விலை கிட்டத்தட்ட 5 சதவீதம் வரை சரிந்து, வர்த்தக முடிவில் 3.92 சதவீத இறக்கத்துடன் நிலைபெற்றது.
என்.எஸ்.இ., ஐ.பி.ஓ., என்பது இந்திய பங்கு சந்தையில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும் பங்கு வெளியீடு. முழுக்க முழுக்க ஓ.எப்.எஸ்., முறையில் பழைய பங்குதாரர்களால் கிட்டதட்ட 6 சதவீத என்.எஸ்.இ., பங்குகள் விற்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பட்டியலிடப்படாத சந்தை தரவுகளின்படி, என்.எஸ்.இ., நிறுவன மதிப்பு கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
ஐ.பி.ஓ.,வில் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ள து.
இப்பங்குகளை பழைய பங்குதாரர்களான, 'எஸ்.பி.ஐ., நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஜி.ஐ.சி., பேங்க் ஆப் பரோடா, யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ்' போன்ற உள்நாட்டு நிறுவனங்களும், 'கனடா பென்ஷன் பண்டு' போன்ற சில அன்னிய முதலீட்டாளர்களும் விற்க இருப்பதாக கூறப்படுகிறது.
