தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சரிவில் இருந்து மீளும் ரூபாய் 4 நாட்களில் 150 காசு உயர்வு

 சரிவில் இருந்து மீளும் ரூபாய் 4 நாட்களில் 150 காசு உயர்வு

 சரிவில் இருந்து மீளும் ரூபாய் 4 நாட்களில் 150 காசு உயர்வு


UPDATED : ஜூன் 18, 2026 02:31 AM

ADDED : ஜூன் 18, 2026 02:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2026 02:31 AM ADDED : ஜூன் 18, 2026 02:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை காரணமாக, கடந்த 4 நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு 150 காசு வரை உயர்ந்து, தற்போது 94.50 என்ற அளவில் வலுவாக உள்ளது.

'ஹார்முஸ் ஜலசந்தி' மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 79 டாலராக குறைந்துள்ளது. இது, இந்தியாவின் இறக்குமதி செலவை பெருமளவு குறைக்கும்.

இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கும் போக்கு தற்போது கணிசமாக குறைந்து வருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 1.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்திருந்தனர். அடுத்து வந்த ஏப்ரல், மே மாதங்களில் விற்பனை கணிசமாக குறைந்தது.

Image 1589148


இதனுடன், ரிசர்வ் வங்கி எடுத்துள்ள புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இந்த முதலீட்டு வரவை மேலும் சீராக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ரூபாயின் மீதான சந்தைப்பார்வை இப்போது சாதகமாக மாறியுள்ளது. வரும் ஜூன் 19 அன்று ஜெனிவாவில் கையெழுத்தாக உள்ள அமெரிக்கா - ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்பந்தமே அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகும்.

தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 94.80 என்ற வலுவான எல்லையை உடைத்துள்ளதால், வரும் நாட்களில் 95.00 - 95.30 என்பது டாலருக்கான வலுவான தடை நிலையாக மாறும். வலுவான வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிற்குள் வரும் பட்சத்தில், ரூபாய் மதிப்பு படிப்படியாக 94.00 முதல் 93.80 என்ற எல்லை வரை மேலும் உயர வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us