என்.எஸ்.இ., - ஐ.பி.ஓ., முதலீட்டு வங்கிகள் போட்டி
என்.எஸ்.இ., - ஐ.பி.ஓ., முதலீட்டு வங்கிகள் போட்டி
ADDED : பிப் 27, 2026 07:41 AM

'என்.எஸ்.இ.,' நிறுவனத்தின் 'ஐ.பி.ஓ.,' பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 22,728 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்கு வெளியீட்டுக்கு ஆலோசனை வழங்க முதலீட்டு வங்கிகளுக்கு இந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஐ.பி.ஓ.,வை முன்னின்று நடத்த தகுதியான வங்கிகள், வரும் மார்ச் மாதத்தின் முதல் பாதிக்குள் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது. இதற்காக 'ரோத்ஸ்சைல்டு அண்டு கோ' நிறுவனத்தை தனிப்பட்ட ஆலோசகராக என்.எஸ்.இ.,
ஏற்கனவே நியமித்துள்ளது.
இந்த பங்கு வெளியீடு முற்றிலும் 'ஆபர் பார் சேல்' முறையில் அமையும். அதாவது, தற்போதுள்ள பங்குதாரர்கள் தங்களது
4 முதல் 4.5 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்ய உள்ளனர்.
இந்த 'ஐ.பி.ஓ.,' வெளியீட்டில் இடம்பிடிக்க, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வங்கிகள் போட்டி போட்டு வரும் நிலையில், எந்தெந்த வங்கிகள் இந்த ஐ.பி.ஓ.,வை நிர்வகிக்க போகின்றன என்கிற எதிர்பார்ப்பு சந்தையில் எழுந்துள்ளது.

