ADDED : டிச 16, 2025 12:53 AM

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 29 பைசா குறைந்து முன்னெப்போதும் இல்லாத அளவாக 90.78ஆக வீழ்ச்சியடைந்தது. வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு 90.80 வரை சென்றது.
இந்தியப் பொருட்களின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீதம் வரையிலான கூடுதல் வரிகளுக்கு எதிராக, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த வரிகள் சட்டவிரோதமானது என்றும்; அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்பட செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்மானம் உடனடியாக வரிகளை நீக்காது என்றாலும், இது வர்த்தகப் பேச்சுகளில் நம்பிக்கையை அதிகரித்து, ரூபாய்க்கு சாதகமாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அன்னிய முதலீடுகள் வெளியேற்றமும் ரூபாய் மதிப்பு சரிய காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும், ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கங்களை நிர்வகிக்க, ரிசர்வ் வங்கி சந்தையில் 'பை-செல் ஸ்வாப்' முறையில் ஏலத்தை நடத்தியது.

