தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/பாரஸ் ஹெல்த்கேர் லிமிடெட்

பாரஸ் ஹெல்த்கேர் லிமிடெட்

பாரஸ் ஹெல்த்கேர் லிமிடெட்


UPDATED : அக் 20, 2026 12:00 AM

ADDED : அக் 19, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:00 AM ADDED : அக் 19, 2026 08:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹரியானா மாநிலம் குருகிராமில் ‘பாரஸ் ஹெல்த்கேர்’ நிறுவனம் 2006ம் ஆண்டில் தனது முதல் மருத்துவமனையை தொடங்கியது. தற்போது ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் எட்டு மருத்துவமனைகளை நடத்துகிறது. இதய நோய், புற்றுநோய், நரம்பியல், செரிமான மண்டல நோய்கள், எலும்பியல் மற்றும் விளையாட்டு காயங்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை ஆகிய ஆறு முக்கிய பிரிவுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது. மேலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிக்கலான சிகிச்சைகளையும் வழங்குகிறது.

ஜூன் 30, 2026 நிலவரப்படி இதன் எட்டு மருத்துவமனைகளிலும் மொத்தம் 2,211 படுக்கைகள் உள்ளன; 1,084 மருத்துவர்கள் மற்றும் 1,937 செவிலியர்கள் பணிபுரிகின்றனர். புதிய மருத்துவமனைகளை தொடங்குவதுடன், ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. மருத்துவ சேவைகள் போதுமான அளவில் இல்லாத பகுதிகளில் மருத்துவமனை அமைத்து சிறப்பு சிகிச்சைகளை வழங்குவது போன்ற வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இடங்களை தேர்ந்தெடுக்கிறது.

சிறப்பம்சங்கள்

*மருத்துவ துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டு அனுபவத்தை கொண்டுள்ளது

*அறுவை சிகிச்சை ரோபோக்கள், எம்.ஆர்.ஐ., பி.இ.டி.,–சி.டி., கதிர்வீச்சு சிகிச்சைக்கான ‘லினாக்’ உள்ளிட்ட நவீன உபகரணங்களை கொண்டுள்ளது

*எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மற்றும் கல்லீரல், சிறுநீரக மாற்று சிகிச்சைகளையும் வழங்குகிறது

*இதன் ஏழு மருத்துவமனைகளுக்கு என்.ஏ.பி.ஹெச்., அங்கீகாரம் உள்ளது

*மருத்துவ காப்பீட்டு பயன்பாடு அதிகரிப்பது, நவீன சிகிச்சைகளுக்கான தேவை வளர்வது, மருத்துவ சுற்றுலா விரிவடைவது, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசு நடவடிக்கைகள் ஆகியவை மருத்துவமனை துறையின் வளர்ச்சிக்கு ஆதரவாக அமையலாம்.

இடர்கள்

*நிறுவனத்தின் பெரும்பாலான மருத்துவமனைகள் குறிப்பிட்ட சில மாநிலங்களில் அமைந்துள்ளன

*அகில இந்திய அளவில் செயல்படும் பெரிய மருத்துவமனைகளின் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது

*புதிய மருத்துவமனைகளை தொடங்குவதற்கும், படுக்கை வசதிகளை அதிகரிப்பதற்கும், நவீன மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கும் அதிக முதலீடு தேவைப்படுகிறது

*இதய நோய், புற்றுநோய், நரம்பியல் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளிலிருந்து நிறுவனத்தின் பெரும்பகுதி வருவாய் கிடைக்கிறது

*மருத்துவமனைகளின் செயல்பாடு உரிய சட்டங்கள், அரசு விதிமுறைகள், மருத்துவ கட்டணங்கள் மற்றும் பிற ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டவை. விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள், சட்ட வழக்குகள் அல்லது வரி விதிப்புகளால் கூடுதல் செலவுகள், அபராதங்கள் அல்லது நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்கவேண்டும்

ஐ.பி.ஓ., ஆரம்ப தேதி : 21.10.2026


ஐ.பி.ஓ., நிறைவு தேதி: 23.10.2026
பட்டியலிடப்படும் சந்தைகள்: என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ.,
பட்டியலிடப்படும் நாள்: 28.10.2026 (உத்தேசமாக)
திரட்டப்படும் தொகை : ரூ. 1,450 கோடி வரை (அதிகபட்ச அளவு ரூபாயில்)
புதிய பங்குகள் வெளியீடு: ரூ.500 கோடி
ஆபர் பார் சேல்: ரூ. 950 கோடி வரை (அதிகபட்ச அளவு ரூபாயில்)
முகமதிப்பு: ரூ.1
விலை வரம்பு: ரூ.660 -– ரூ. 693 வரை
விண்ணப்பிக்க குறைந்த பட்ச அளவு: எண்ணிக்கை: 21 பங்குகள்
தொகை: ரூ.13,860.00



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us