தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/சந்தை துளிகள்

சந்தை துளிகள்

சந்தை துளிகள்


UPDATED : அக் 20, 2026 12:00 AM

ADDED : அக் 19, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:00 AM ADDED : அக் 19, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

26% உயர்ந்த

‘பி.சி., ஜுவல்லர்’

த ங்க மற்றும் நகை தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி நகை நிறுவனமான ‘பி.சி., ஜுவல்லர்’ நிறுவன பங்குகள் கடந்த சில வர்த்தக தினங்களாக தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகின்றன. கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும் 26 சதவீதம் உயர்ந்துள்ளது. நேற்று மட்டுமே கிட்டத்தட்ட 12 சதவீதம் உயர்ந்து சந்தை முடிவில் 18.10 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடன் இல்லாத நிறுவனமாக மாறியது, 73.60 கோடி ரூபாய் மதிப்பிலான ‘பிளாக் டீல்’ போன்றவை இதற்கான முக்கிய காரணங்கள்.

52 வார உச்சம் தொட்ட

‘கிராஸ்’ பங்கு விலை

வா கன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ‘கிராஸ்’ நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 16 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகமானது, வர்த்தக முடிவில் 8.85 சதவீதம் ஏற்றத்துடன் 289 ரூபாய்க்கு நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே இப்பங்கு 326.40 என்ற புதிய 52 வார உச்சத்தையும் பதிவு செய்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வெளியிட்ட நல்ல நிதி முடிவுகளே பங்கு விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாகும்.

சுஸ்லான் எனர்ஜி

6 மாதத்தில் 20% சரிவு

இந் தி ய பங்கு சந்தையில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான அழுத்தத்தை சந்தித்து வரும் ‘சுஸ்லான் எனர்ஜி’ பங்கு விலை, கடந்த 6 மாதங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவை கண்டுள்ளன. நேற்றைய வர்த்தக முடிவில் கிட்டத்தட்ட 4 சதவீதம் சரிந்து 40.38 ரூபாயில் நிறைவடைந்தது. ஒட்டுமொத்த சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த பங்கு விலையில் தற்காலிக தளர்வு ஏற்பட்டுள்ளது.

‘ஜஸ்ட் டயல்’ பங்கு விலை

13 சதவீதம் சரிந்தது

நே ற் றைய வர்த்தகத்தில், முன்னணி எஸ்.இ.ஓ., நிறுவனமான ‘ஜஸ்ட் டயல்’ பங்குகள் ஒரே நாளில் கிட்டத்தட்ட 13 சதவீதம் உயர்ந்து 802 என்ற நிலையை தொட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வர்த்தக முடிவில் 4.43 சதவீத உயர்வுடன் 744 ரூபாயில் நிறைவடைந்தது. இதன் வர்த்தக அளவு வழக்கமான அளவை விட கிட்டத்தட்ட 115 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்தோனேசிய பங்கு சந்தை வீழ்ச்சி

இந் தோனேசிய பங்கு சந்தையை வளரும் சந்தை நிலையிலிருந்து கீழிறங்ககூடும் என்று எம்.எஸ்.சி.ஐ.. அமைப்பு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, அந்நாட்டு சந்தையில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் கடந்த வார இறுதியில் ஒரே நாளில் சந்தையின் மதிப்பு கிட்டத்தட்ட 65 பில்லியன் டாலர் வரை சரிந்ததுடன், இந்தோனேசிய பங்கு சந்தை குறியீடு பல வருட குறைந்தபட்ச நிலையை எட்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us