தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஜியோவுக்கு அனுமதி: ரூ.38,000 கோடி திரட்டுகிறது

 ஜியோவுக்கு அனுமதி: ரூ.38,000 கோடி திரட்டுகிறது

 ஜியோவுக்கு அனுமதி: ரூ.38,000 கோடி திரட்டுகிறது


ADDED : ஆக 29, 2026 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 02:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் டிஜிட்டல் சேவை பிரிவான 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்', பங்கு வெளியிட செபி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐ.பி.ஒ., வெளியீட்டின் வாயிலாக இந்நிறுவனம் கிட்டத்தட்ட 37,700 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ.,வாக அமைய வாய்ப்புள்ளது.

இந்நிறுவனம் ஜூன் மாதத்தில் செபியிடம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்திருந்த நிலையில், ஆகஸ்ட் 28ல் இறுதி ஒப்புதல் கிடைத்துள்ளது. ஐ.பி.ஓ.,வில் 27 கோடி புதிய பங்குகள் வரை வெளியிடப்பட உள்ளன. இது ஐ.பி.ஓ.,வுக்கு பிறகு நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் கிட்டத்தட்ட 2.9 சதவீதமாக இருக்கும் என வரைவு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us