தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 15 நிமிடத்தில் 4,000% ஏற்றம் அடுத்த நொடியில் பூஜ்ஜியம்

 15 நிமிடத்தில் 4,000% ஏற்றம் அடுத்த நொடியில் பூஜ்ஜியம்

 15 நிமிடத்தில் 4,000% ஏற்றம் அடுத்த நொடியில் பூஜ்ஜியம்


ADDED : ஆக 29, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 02:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப ங்கு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய குளோசிங் ஏல முறையில், காலாவதி நாளில் ஆப்ஷன் விலைகளில் மிகப்பெரிய ஏற்ற, இறக்கங்கள் ஏற்படுவது முதலீட்டாளர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பி.எஸ்.இ.,யில் வங்கி குறியீட்டை அடிப்படையாக கொண்ட 64,000 'புட்' ஆப்ஷன், ஏலத்தின் தொடக்கத்தில் 1.70 ரூபாய்க்கு வர்த்தகமானது. சில நிமிடங்களில் 68.55 ரூபாயாக உயர்ந்தது. இது கிட்டதட்ட 4,000 சதவீத ஏற்றம். ஆனால், அடுத்த 15 நிமிடங்களுக்குள் அதன் விலை மீண்டும் பூஜ்ஜியத்துக்கு சரிந்தது.

இதற்கு முக்கிய காரணம், பங்குகளின் இறுதி விலையை நிர்ணயிக்கும் ஏல நடைமுறைக்கும், அந்த நேரத்திலும் தொடர்ந்து வர்த்தகமாகும் ஆப்ஷன்களுக்கும் இடையிலான வேறுபாடாகும். குறிப்பாக, காலாவதியாகும் ஆப்ஷன்களில் சிறிய விலை மாற்றமும் மிகப்பெரிய லாபம் அல்லது முழு இழப்பை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், பி.எஸ்.இ.,யில் ஏல நேரத்தில் வர்த்தக பணப்புழக்கம் குறைவாக இருந்ததால், பெரிய ஆர்டர்களின் விலைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆப்ஷன்களில் சில நிமிடங்களில் பல மடங்கு லாபம் கிடைப்பது போல தெரிந்தாலும், அதே வேகத்தில் முதலீடு முழுதையும் இழக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் திடீர் விலை ஏற்றங்களை பார்த்து அவசரமாக வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் புதிய க்ளோசிங் ஏல முறையின் கீழ் பி.எஸ்.இ.,யில் நடந்த முதல் மாதாந்திர காலாவதியின்போது ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us