ADDED : செப் 29, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'போ ன் பே' செயலியில், டெபிட், கிரெடிட் மற்றும் ப்ரீபெய்டு கார்டுகளை பதிவிட்டு, எளிதாக பணம் செலுத்தும் வசதியை, 'மாஸ்டர்கார்டு' மற்றும் போன் பே இணைந்து அறிமுகம் செய்துள்ளன.
இதன்படி, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், மாஸ்டர்கார்டு நிறுவனம் வழங்கிய டெபிட், கிரெடிட் கார்டு விபரங்களை, போன் பே செயலியில் பதிவு செய்ய வேண்டும். பிறகு, கார்டுகளை எடுத்து செல்லும் அவசியமின்றி, பணம் செலுத்த வேண்டிய இடங்களில், ஸ்மாட்போனில் உள்ள போன் பே செயலி வாயிலாக எளிதாக பரிவர்த்தனை செய்யலாம்.
இந்த வசதியை, இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுதும் பயன்படுத்தலாம். பாதுகாப்பு அச்சமின்றி, இணைய தள பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஒருமுறை கார்டு விபரங்களை போன் பே செயலியில் பதிவிட்டால், விரைவான, பாதுகாப்பான பண செலுத்தல்களை மேற்கொள்ள முடியும்.