ADDED : நவ 14, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பு திய பங்கு வெளியீட்டில், 3,900 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட வந்த நிதி தொழில்நுட்ப நிறுவனமான பைன் லேப்ஸ் பங்குகள் நேற்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஆரம்ப பங்கு விலை 221 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 9.50 சதவீத உயர்வுடன் பங்கு ஒன்று, 242 ரூபாய்க்கு பட்டியலானது.
தொடர்ந்து, நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சிக்கு வாய்ப்பு இருப்பதாக முதலீட்டாளர்கள் கருதியதால், முதல் நாள் வர்த்தக நேரத்தின் போது, பைன் லேப்ஸ் பங்குகள் 18 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டன. வர்த்தக நேர முடிவில், 14 சதவீத உயர்வுடன், பங்கு ஒன்று 251.80 ரூபாயாக இருந்தது. முதல் நாள் வர்த்தக நேர முடிவில், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 28,914 கோடி ரூபாயாக இருந்தது.

