UPDATED : நவ 05, 2026 02:12 AM
ADDED : நவ 04, 2026 10:25 PM

நிப்டியில் வலுவானதொரு புல்லிஷ் கேண்டிலுடன் 9 நாள், 21 நாள் சராசரிகள் (இ.எம்.ஏ.,) மற்றும் 20 நாள், 50 நாள் சராசரிகளுக்கு (எஸ்.எம்.ஏ.,) மேலே நாளின் உச்சமான 23,960ல் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., -50.92 என்ற அளவில் உள்ள சிக்னல் லைனுக்கு மேலே 107.13 என்ற அளவில் +158 என்ற பாசிட்டிவ் டைவர்ஜன்ஸுடன் இருக்கிறது. ஆர்.ஓ.சி., 3.52 என்ற அளவில் இருப்பது ஏற்றத்துக்கு அனுகூலமாக இருக்கிறது. ஆர்.எஸ்.ஐ., 68.55 என்ற அளவில் இருப்பது நிப்டி 'ஓவர்பாட்' நிலையை நெருங்கி வருவதை காட்டுகிறது.
ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் (5,3) 100 என்ற அளவிலும், பாஸ்ட் ஸ்டோக்காஸ்ட்டிக் %கே(5) மற்றும் %டி(3,5) 100 என்ற அளவிலும் இருப்பது மிக அதிகமான ஓவர்பாட் நிலையை உறுதி செய்வதாய் உள்ளது. +டி.ஐ.,(14) 33.38 என்ற அளவிலும், -டி.ஐ.,(14) 17.86 என்ற அளவிலும், ஏ.டி.எக்ஸ்.,(14) 30.66 என்ற அளவிலும் இருப்பது கணிசமான வலிமையுள்ள ஏற்ற டிரெண்டுக்கு ஆதரவாக உள்ளது.
மொத்தத்தில் டெக்னிக்கல் சூழல் ஏற்றத்திற்கு மிகவும் சாதகமாக இருந்தாலுமே, ஓவர்பாட் நிலைமை வெளிப்படையாக தெரிவது, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதை உணர்த்துகிறது. 24,000க்கு மேலே சென்று நிலைத்தால் டெக்னிக்கலாக ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த நிகழ்வுகளை வைத்து பார்த்தால் 'கன்சாலிடேஷனோ' அல்லது 'பிராபிட் புக்கிங்கோ' நடைபெறுவதற்கான வாய்ப்பு சற்று கூடுதலாக தென்படுகிறது.
23,784 | 23,608 | 23,507
24,049 | 24,137 | 24,238
இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்
நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 04.11.26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
பெட்பேங்க் பைனான்சியல் சர்விசஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) : -0.59 ஆர்.ஓ.சி., : -2.43 ஆர்.எஸ்.ஐ., : 57.81) 158.00 156 145 162 3, 5
மஹிந்திரா & மஹிந்திரா பைனான்சியல் சர்விசஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) : -19.09 ஆர்.ஓ.சி., : -13.30 ஆர்.எஸ்.ஐ., : 29.94) 269.85 265 263 275 1, 6
என்.பி.சி.சி., (இந்தியா) (எம்.ஏ.சி.டி.,(12,26) : -1.53 ஆர்.ஓ.சி., : 2.95 ஆர்.எஸ்.ஐ., : 55.31) 77.74 75 72 79 1, 4
பவர் கிரிட் (எம்.ஏ.சி.டி.,(12,26) : 0.42 ஆர்.ஓ.சி., : 4.63 ஆர்.எஸ்.ஐ., : 55.89) | 262.05 | 258 | 253 | 267 | 1, 4, 6
டாடா பவர் (எம்.ஏ.சி.டி.,(12,26) : -1.37 ஆர்.ஓ.சி., : 1.74 ஆர்.எஸ்.ஐ., : 57.57) | 360.00 | 358 | 354 | 364 | 1, 4, 6

