UPDATED : நவ 04, 2026 01:10 AM
ADDED : நவ 03, 2026 10:28 PM

3.11.26 | ஆரம்பம் | அதிகம் | குறைவு | நிறைவு
நிப்டி | 23,582.25 | 23,810.85 | 23,482.80 | 23,810.85
நிப்டி 141 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து உயர்ந்து நாளின் இறுதியில் 370 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. இரண்டாவது நாளாக நிப்டி நாளின் உச்சத்தில் நிறைவடைந்துள்ளது. 17 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு குறைந்தபட்சமாக 0.26 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி100' குறியீடு அதிகபட்சமாக 1.47 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறைசார் குறியீடுகளில் 18 குறியீடுகள் ஏற்றத்துடனும், 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி எப்.எம்.சி.ஜி.,' குறியீடு அதிகபட்சமாக 3.65 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.27 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,713 நிறுவனங்களின் பங்குகளில் 2,127 ஏற்றத்துடனும், 1,477 இறக்கத்துடனும், 109 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்தன. நிப்டியில் வலுவான 'புல்லிஷ் கேண்டில்' தோன்றியுள்ளது. 9 மற்றும் 21 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலேயும், 20 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (எஸ்.எம்.ஏ.,) மேலேயும் நிப்டி நிறைவடைந்துள்ளது. இது நிப்டியின் குறுகிய கால மற்றும் மத்திம கால டிரெண்டில் முன்னேற்றம் வந்திருப்பதை காட்டுகிறது. எம்.ஏ.சி.டி., சிக்னல் லைனான -90.43 என்ற அளவுக்கு மேல் 41.68 என்ற அளவில் 132.11 புள்ளிகள் அதிகமாக இருப்பது ஏற்றத்துக்கான மொமென்டம் ஓரளவு அதிகரித்திருப்பதை குறிக்கிறது. ஆர்.ஓ.சி., 3.54 என்ற அளவில் ஏற்றத்துக்கு சாதகமாக உள்ளது. ஆர்.எஸ்.ஐ., 66.59 என்ற அளவில் இருப்பது ஏற்றத்துக்கான மொமென்டம் அதிகரிப்பதை காட்டுகிறது.
ஸ்டோக்காஸ்ட்டிக் %டி(3,5) 97.04 என்ற அளவிலும் %கே(5) 100 இருப்பது, நிப்டி சற்று 'ஓவர்பாட்' நிலையில் இருப்பதை குறிக்கிறது. +டி.ஐ., 31.80 என்ற அளவிலும், -டி.ஐ., 19.08 என்ற அளவிலும் ஏ.டி.எக்ஸ்.,(14) 30.69 என்ற அளவிலும் இருப்பது ஓரளவுக்கு ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புள்ளதையே காட்டுகிறன. பல்வேறு இண்டிகேட்டர்கள் ஏற்றத்துக்கு சாதகமாக இருந்தாலுமே, குறுகிய காலத்தில் வேகமான ஏற்றத்தை சந்தித்து நிப்டி ஓவர்பாட் நிலையில் இருப்பதால், எந்த நேரத்திலும் கிடைத்த லாபத்தை வெளியே எடுப்பதற்கான விற்பனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, 23,810க்கு கீழே இறங்காமல் தொடர்ந்து மேலேயே இருக்கும்பட்சத்தில் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.
23,592 | 23,373 | 23,248
23,920 | 24,030 | 24,155
இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்
நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் | 3.11.26 இறுதி விலை | கவனிக்க வேண்டிய விலை | டெக்னிக்கல் சப்போர்ட் | டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் | டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
ஆக்சிஸ் பேங்க் (எம்.ஏ.சி.டி., (12,26) : -6.29 ஆர்.ஓ.சி., : -4.29 ஆர்.எஸ்.ஐ., : 50.03) | 1,232.70 | 1,216 | 1,200 | 1,245 | 2, 5
சி.எம்.எஸ்., இன்போசிஸ்டம்ஸ் (எம்.ஏ.சி.டி., (12,26) : -5.22 ஆர்.ஓ.சி., : -2.64 ஆர்.எஸ்.ஐ., : 44.95) 213.00 209 205 217 2, 5
லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் (எம்.ஏ.சி.டி., (12,26) : 0.85 ஆர்.ஓ.சி., : 1.56 ஆர்.எஸ்.ஐ., : 59.96) 114.30 113 111 116 6
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எம்.ஏ.சி.டி., (12,26) : -2.43 ஆர்.ஓ.சி., : 0.38 ஆர்.எஸ்.ஐ., : 51.89) 395.50 391 386 400 6
கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் (எம்.ஏ.சி.டி., (12,26) : -39.01 ஆர்.ஓ.சி., : -7.56 ஆர்.எஸ்.ஐ., : 40.33) 953.40 942 929 970 5
டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
(1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு
(3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு
(5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்
அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு https://www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

