UPDATED : அக் 03, 2025 11:42 PM
ADDED : அக் 03, 2025 11:41 PM

நடப்பாண்டில் கடந்த செப்டம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில், தேசிய பங்கு சந்தையில் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக மெயின்போர்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு கிடைத்திருப்பது என்ன?
![]() |
கூட்டிக் கழித்து பார்க்கலாம்...
கடந்த ஒன்றாம் தேதி இறுதி விலை நிலவரப்படி, ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 66 நிறுவனங்களின் பங்குகளில் 39 நிறுவன பங்குகள் லாபத்தையும்; 27 நிறுவன பங்குகள் நஷ்டத்தையும் கண்டுள்ளன.
அதிர்ஷடசாலியா?
நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்து, இந்த 66 ஐ.பி.ஓ.,க்களிலும் தலா ஒரு பங்கு உங்களுக்கு கிடைத்திருந்தால், கடந்த 1ம் தேதி இறுதி நிலவரப்படி, உங்களுக்கு 15.89 சதவீதம் லாபம் கிடைத்திருக்கும்.
சூப்பர் அதிர்ஷ்டசாலியா?
நீங்கள் சூப்பர் அதிர்ஷ்டசாலியாக இருந்து, லாபம் கண்ட 39 ஐ.பி.ஓ.,க்களில் மட்டும் தலா ஒரு பங்கு உங்களுக்கு கிடைத்திருந்தால், 31.78 சதவீத லாபம் கிடைத்திருக்கும்.
துரதிருஷ்டசாலியா?
நஷ்டம் கண்ட 27 ஐ.பி.ஓ.,க்களில் மட்டும் தலா ஒரு பங்கு உங்களுக்கு கிடைத்திருந்தால்,
நீங்கள் -9.24 சதவீத நஷ்டமடைந்து இருப்பீர்கள்.
ஐ.பி.ஓ.வில் பங்குகள் வாங்குவது குறித்து நீங்களே கூட்டிக் கழித்து ஒரு முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்!
![]() |
முதலீடுகளை மேற்கொள்வதற்காக யார் சொல்வதை கேட்கின்றனர்?
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், பொதுவாக எங்கிருந்து தகவல்களை பெற்று முதலீடு செய்ய முற்படுகின்றனர் என்பதை அறிந்துகொள்ள, ஆய்வு ஒன்றை செபி மேற்கொண்டது. கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் 53,357 பேரிடம் நடத்திய இந்த ஆய்வின் வாயிலாக தெரிய வந்த விபரங்கள்:
நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் : 59%
நிதி இன்புளூயன்ஸர்கள் : 56%
ஆன்லைன் முதலீட்டு அமைப்புகள் : 34%
செய்திகள், வலைப்பதிவுகள் : 28%
நிதி வல்லுநர்கள் : 25%