தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ரயில்வே துறை பங்குகள் உயர்வு

 ரயில்வே துறை பங்குகள் உயர்வு

 ரயில்வே துறை பங்குகள் உயர்வு


ADDED : செப் 11, 2026 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 03:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கி ட்டத்தட்ட 20,804 கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் எதிரொலியாக ரயில்வே துறை பங்குகள் நேற்று ஏற்றம் கண்டன.

இத்திட்டங்கள் நிலக்கரி, சிமென்ட், ஸ்டீல், கன்டெய்னர், வாகனங்கள், உணவு தானியங்கள், பெட்ரோலிய பொருட்கள், உரம் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளின் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடங்களாக இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால், ரயில்வே நிறுவனங்கள் பலன் பெறும் என்ற எதிர்பார்ப்பில், நேற்று வர்த்தகத்தில் ரயில்வே துறை பங்குகள் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக 'டெக்ஸ்மாகோ ரயில்' பங்கு விலை 4 சதவீதம் உயர்ந்தது.

இதுதவிர, இர்கான், திதாகர் ரயில் சிஸ்டம்ஸ், ஜூபிட்டர் வேகன்ஸ், ஆர்.ஐ.டி.இ.எஸ்., ஆர்.வி.என்.எல்., ஐ.ஆர்.எப்.சி., ஐ.ஆர்.சி.டி.சி., ஆகிய ரயில்வே துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. ஆனால், வர்த்தக முடிவில் பல நிறுவன பங்குகள் ஏற்றத்தில் நிலைபெறவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us