உள்ளடக்கத்திற்கு செல்ல

50 % ஈக்விட்டி முதலீடுகளை ஈர்த்த ஸ்மால்கேப், மிட்கேப் பண்டுகள்
50 % ஈக்விட்டி முதலீடுகளை ஈர்த்த ஸ்மால்கேப், மிட்கேப் பண்டுகள்
UPDATED : செப் 11, 2026 03:58 AM
ADDED : செப் 11, 2026 03:43 AM

அ நிறம் | அளவு
கடந்த ஆகஸ்ட் மாதம் ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகளுக்கு வந்த முதலீடுகள் 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஈக்விட்டி பண்டுகளில் செய்த முதலீடு 19 சதவீதம் உயர்ந்து 29,328.62 கோடி ரூபாயாக இருந்ததாக 'ஆம்பி' தெரிவித்துள்ளது . அதில், கிட்டத்தட்ட பாதி முதலீடுகளை ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பண்டுகள் கூட்டாக (14,962.73 கோடி ரூபாய்) ஈர்த்துள்ளன. எஸ்.ஐ.பி., முதலீடுகள் 32,297 கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லார்ஜ்கேப் பண்டுகள், டெப்ட் பண்டுகள் மற்றும் ஓவர்சீஸ் பண்டுகளில் இருந்து முதலீடுகள் வெளியேறி உள்ளன. ஹைப்ரிடு பண்டுகளில் முதலீடுகளின் வரத்து குறைந்துள்ளது.
![]() |

