தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ரியல் எஸ்டேட் பிரைவேட் ஈக்விட்டி முதலீடுகள் சரிவு

ரியல் எஸ்டேட் பிரைவேட் ஈக்விட்டி முதலீடுகள் சரிவு

ரியல் எஸ்டேட் பிரைவேட் ஈக்விட்டி முதலீடுகள் சரிவு


ADDED : ஜூன் 29, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரியல் எஸ்டேட் சந்தையில் 'பிரைவேட் ஈக்விட்டி' முதலீடுகள் 2026ம் ஆண்டின் முதல் அரையாண்டில், 23 சதவீதம் குறைந்துள்ளதாக 'நைட்பிராங் இந்தியா' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. மேலும், வீடுகளை விட அலுவலக சொத்துக்களில் முதலீடு செய்வதில் பிரைவேட் ஈக்விட்டி பண்டுகள் அதிக ஆர்வம் காட்டியுள்ளன.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

* சர்வதேச வட்டி விகிதங்கள் உயர்வாக இருப்பதால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்கின்றனர்

* மொத்த ரியல் எஸ்டேட் முதலீட்டில் 89 சதவீதம் அலுவலக சொத்துக்களில் குவிந்துள்ளன

* அலுவலக சொத்துக்களில் முதலீடு 33 சதவீதம் உயர்ந்துள்ளது

* வீடமைப்பு திட்டங்களில் முதலீடு 57 சதவீதம் குறைந்துள்ளது

* அலுவலக முதலீடுகளில் 75 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள சொத்துக்களுக்கு சென்றுள்ளன

* ஜி.சி.சி., சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து அலுவலகங்களுக்கு அதிக டிமாண்டு உள்ளது

* டெல்லி - என்.சி.ஆர்., புனே, சென்னை ஆகிய நகரங்களில் அதிக பிரைவேட் ஈக்விட்டி முதலீடுகள் குவிந்துள்ளன.

காலம் மொத்த முதலீடு (ரூ.கோடி) 2025 முதல் அரையாண்டு 13,715 2026 முதல் அரையாண்டு 10,543



அலுவலக முதலீடு (ரூ.கோடி) 2025 முதல் அரையாண்டு 6,997.50 2026 முதல் அரையாண்டு 9,311.34



வீடமைப்பு முதலீடு (ரூ.கோடி) 2025 முதல் அரையாண்டு 2,771 2026 முதல் அரையாண்டு 1,194



சொத்து வகை வாரியான முதலீடு (ரூ.கோடி) அலுவலகங்கள் 9,311.34 வீடுகள் 625.11 சேமிப்பு கிடங்குகள் 326.55 மற்றவை 280



பகுதி வாரியான முதலீடு (ரூ.கோடி) பகுதி அலுவலகங்கள் வீடுகள் மொத்தம் டெல்லி என்.சி.ஆர்., 3,395 441.3 3,835.56 புனே 2,881 439 3,320.55 சென்னை 1,443.35 - 1,443.35 பெங்களூரு 1,081.35 - 1,081.35 மும்பை 509.42 277 786.52



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us