தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ பங்கு வெளியீட்டால் என்.எஸ்.இ.,மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாக உயரும்

 பங்கு வெளியீட்டால் என்.எஸ்.இ.,மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாக உயரும்

 பங்கு வெளியீட்டால் என்.எஸ்.இ.,மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாக உயரும்


ADDED : ஜூன் 29, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'என்.எஸ்.இ.,' பங்கு வெளியீட்டால் அதன் நிறுவன மதிப்பு கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று 'சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச்' நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

 என்.எஸ்.இ.,க்கு பங்கு வர்த்தகத்தில் 93 சதவீத சந்தை பங்கு உள்ளது

 ஈக்விட்டி பியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 100 சதவீத பங்கு உள்ளது

 ஈக்விட்டி இண்டெக்ஸ் ஆப்ஷன் வர்த்தகத்தில் 72 சதவீத பங்கு உள்ளது

 கரன்சி டெரிவேட்டிவ்களில் கிட்டத்தட்ட ஏகபோக உரிமை கொண்டுள்ளது

 கார்ப்பரேட் கடன் பத்திர வர்த்தகத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறது

 நிறுவனமாக அதிக லாப விகிதமும், அதிக 'ரிட்டன் ஆன் ஈக்விட்டி'யும் கொண்டுள்ளது.

 கிட்டத்தட்ட 12.90 கோடிக்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு சேவை வழங்குகிறது

 இந்திய குடும்பங்கள் 'பிசிக்கல்' சொத்துக்களில் இருந்து நிதி சொத்துக்களுக்கு மாறி வருவதால், என்.எஸ்.இ.,க்கு முதலீட்டாளர்கள் அதிக மதிப்பை கொடுக்க தயாராக இருப்பார்கள்

 ஆனால் என்.எஸ்.இ.,யின் வருவாயில் 80 சதவீதம், வர்த்தக செயல்பாடுகள் வாயிலாகவே கிடைக்கின்றன

 செயல்பாட்டு வருவாயில் 60 சதவீதம் ஆப்ஷன் வர்த்தகம் மற்றும் 9 சதவீதம் பியூச்சர்ஸ் வர்த்தகம் வாயிலாக கிடைக்கிறது

 டெரிவேட்டிவ் வர்த்தகம் குறைந்தால் அது என்.எஸ்.இ., யை பாதிக்கும் என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us