‘ரீட்ஸ், இன்விட்ஸ் நிறுவனங்கள் டிபாசிட்டரி ரசீது வெளியிடலாம்’
‘ரீட்ஸ், இன்விட்ஸ் நிறுவனங்கள் டிபாசிட்டரி ரசீது வெளியிடலாம்’
UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 10:36 PM

‘ர ீட்ஸ்’ மற்றும் ‘இன்விட்ஸ்’ நிறுவனங்கள் ‘டிபாசிட்டரி ரசீது’களை வெளியிடுவதற்கு செபி அனுமதி அளித்துள்ளது.
இதன் வாயிலாக, அன்னிய முதலீட்டாளர்கள் எளிதாக இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும்.
டிபாசிட்டரி ரசீது என்பது, உள்நாட்டு பங்குகளுக்கு ஈடாக வெளிநாட்டு நாணயத்தில் சர்வதேச ‘டிபாசிட்டரி’களால் வெளியிடப்படும் பத்திரமாகும்.
முக்கிய விதிமுறைகள்
1 புதிய டிபாசிட்டரி ரசீதுகளை வெளியிட குறைந்தபட்சம் 75 சதவீத பங்குதாரர்களின் ஒப்புதல் தேவை
2 இந்திய சந்தையில் ஆரம்ப பொது பங்கு வெளியீடும், சர்வதேச சந்தையில் டிபாசிட்டரி ரசீது வெளியீடும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும்போது, 75 சதவீத பங்குதாரர்களின் ஒப்புதல் பெற தேவை இல்லை
3 டிபாசிட்டரி ரசீதுகளுக்கான விலை, இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் விலையை விட குறைவாக இருக்கக்கூடாது
4 சர்வதேச பங்கு சந்தைகளில் வெளியிடப்படும் அனைத்து நிதி மற்றும் நிறுவன தகவல்களும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்திய பங்கு சந்தைகளுக்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
5 இந்தியாவில் வசிப்பவர்கள் டிபாசிட்டரி ரசீதுகளில் முதலீடு செய்ய அனுமதி இல்லை.
