ADDED : நவ 21, 2025 11:50 PM

ஆர். இ.ஐ.டி., எனும் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளை, பங்குச் சந்தையில், பிரத்யேக குறியீடுகளாக சேர்ப்பதற்கான பணிகளை துவங்க இருப்பதாக, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
இந்த நடவடிக்கையின் வாயிலாக, இந்த திட்டங்களை முதலீட்டாளர்கள் எளிதில் வாங்கி விற்கும் திறன் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு முதலீட்டாளர்களிடம் ஆர்.இ.ஐ.டி., மற்றும் ஐ.என்.வி.ஐ.டி., குறித்த விழிப்புணர்வு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. இந்த திட்டங்களை அவர்கள் தங்கள் போர்ட்போலியோவில் இணைக்க துவங்க வேண்டும்.
அதேபோல, இந்த திட்டங்களை முதலீடு செய்ய அனுமதிக்கப்படும் லிக்யூட் மியூச்சுவல் பண்டு திட்டங்களின் பட்டி யலை விரிவாக்குவது குறித்தும் பரிசீலனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

