ADDED : நவ 23, 2025 12:55 AM

ஒ ரு காலத்தி ல் வங்கியில் கணக்கு வைத்திருப்பது என்பதே மிகப் பெரிய விஷயமாக இருந்தது. தற்போது சாதாரண நடைமுறையாகிவிட்டது. அடுத்து டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் மூன்று வங்கி கணக்குகளை பராமரிப்பது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் சாதக பாதகங்கள் குறித்து விளக்குகிறா ர் ஹரிகிருஷ்ணன் .
சாதகங்கள்
w பணப் பரிவர்த் தனைகளை சரியாக பிரித்து நிர்வகிக்கலாம்
w ஒரு வங்கி திவாலானால், பல வங்கிகளில் ரூ. 5 லட்சம் வரை காப்பீடு
w சைபர் மோசடியில் ஒரு கணக்கு பாதிக்கப்பட்டாலும் மற்றவை பாதுகாப்பு
w வாடகை, வட்டி போன்ற வருமானங்களை தனியாக பெறுவது எளிது
பாதகங்கள்
w ஒவ்வொரு கணக்கிலும் குறைந்தபட்ச இருப்பு தேவை
w பல கார்டுகள், கடவுச் சொற்களை நிர்வகிப்பது கடினம்
w தவறான கணக்குகளில் பணம் செலுத்தும் வாய்ப்பு
w வங்கி ஆவணங்கள் மற்றும் வரி தாக்கல் நிர்வாக சுமை அதிகம்

